2018 July 10


Archive for July 10th, 2018

மறுபதிப்புகள்

விகடன் பிரசுரம் வெளியிட்டு வந்த எனது நூல்களான துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா, சிறிது வெளிச்சம். இந்திய வானம்,  கேள்விக்குறி ஆகிய நூல்களுக்கான பதிப்புரிமை முடிந்துவிட்ட நிலையில் அவற்றை தேசாந்திரி பதிப்பகம் புதிய வெளியீடுகளாக கொண்டுவரவுள்ளது. இந்த நூல்களின் கிண்டில் ஈபுக்கையும் தேசாந்திரியே வெளியிடவுள்ளது. மறுபதிப்பு செய்யப்படும்  பணி தற்போது துவங்கியுள்ளது. விரைவில் இவை வெளியாகும்.

ஆங்கிலத்தில் இடக்கை நாவல்

எனது இடக்கை நாவல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.  ப்ரீதம் சக்கரவர்த்தி மிகச்சிறப்பாக மொழியாக்கம்  செய்திருக்கிறார். ஜீரோ டிகிரி பதிப்பகம் இதை வெளியிடுகிறது. நாவலின் பிரதியைச் செம்மைப்படுத்துவதில் வித்யா சுபாஷ். ராம்ஜி. காயத்ரி ஆகியோர் கடும் உழைப்பைத்  தந்திருக்கிறார்கள்.  சர்வதேச அரங்கில் இந்த நாவல் கவனம் பெற வேண்டும் என்ற கனவோடு ராம்ஜி இதை மிகச்சிறப்பாக அச்சிட்டு வெளியிட்டுள்ளார். தமிழில் இந்நாவலின் நான்காவது பதிப்பு தற்போது வெளியாகிவுள்ளது. நல்ல வரவேற்பையும் பாராட்டுதல்களையும் பெற்ற  இடக்கை நாவல் ஆங்கிலத்திலும் அதற்கான [...]

கால் முளைத்த கதைகள்

கால் முளைத்த கதைகள் விலை ரூ 100 பூமியில் மனிதர்கள் தோன்றிய கதை முதல் காகம் ஏன் கறுப்பாக உள்ளது என்பது வரை பல்வகைப்பட்ட இயற்கை சார்ந்த  நாட்டுப்புறக்கதைகளின் தொகுப்பு. இக்கதைகள் உலகெங்குமுள்ள பழங்குடி மக்களிடம் சொல்லப்பட்டு வருகின்றன. அவற்றைத் தேடித்தொகுத்து சிறப்பான அறிமுகம் தந்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன் •• புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கபட்ட ஆறாம் வகுப்பு தமிழ் பாட நூலில் கால்முளைத்த கதைகளில் இருந்து ஒரு கதை பாடமாக வைக்கபட்டுள்ளது. நூலைப் பெற https://www.desanthiri.com/ தொடர்புக்கு [...]

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: