2018 August


Archive for August, 2018

மதுரை புத்தகத் திருவிழாவில்

புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு வருகிறேன் செப்டம்பர் 7, 8,9 ஆகிய தேதிகளில்  தேசாந்திரி பதிப்பக அரங்கு எண் 61ல் வாசகர்கள் சந்திக்கலாம். தினமும் மாலை 4 : 30 முதல் புத்தகக் கண்காட்சியில் இருப்பேன்.

பிற மொழிகளில்

உப பாண்டவம் நாவல் தற்போது மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. டிசி புக்ஸ் 2019ல் வெளியிடுகிறது யாமம் நாவல் தற்போது தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. Gillella Balaji மொழிபெயர்த்துள்ளார். அடுத்த மாதம் இந்நாவல் வெளியாகிறது இடக்கை நாவல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு ஜீரோ டிகிரி பதிப்பகம் மூலம் வெளியாகிறது எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள் என்ற தேர்வு செய்யப்பட்ட 25 சிறுகதைகள் ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது உறுபசி நாவல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்ட்டுள்ளது. இது 2019ல்  வெளியாகிறது துணையெழுத்தின் ஆங்கிலப் பதிப்பை  [...]

விலங்குகள் பொய் சொல்வதில்லை

சிறார்களுக்காக நான் எழுதிய ஐந்து நூல்கள் ஒரே தொகுப்பாக வெளியாகியுள்ளது தேசாந்திரி பதிப்பகத்தின் புதிய வெளியீடு விலை ரூ225

எனது திரைப்படங்கள்

இயக்குனர் லிங்குசாமியின் சண்டக்கோழி 2 திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியிருக்கிறேன். அப்படம் அக்டோபரில் வெளியாகவுள்ளது இயக்குனர் வசந்தபாலனின் ஜெயில் திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறேன் இயக்குனர் ஜிஎன்ஆர் குமரவேலன் எனது  கதை ஒன்றை படமாக்குகிறார். அதன் படப்பிடிப்பு அடுத்தவாரம் துவங்கவுள்ளது இயக்குனர் ஜெகன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திற்கான திரைக்கதையை எழுதியிருக்கிறேன் எனது யாமம் நாவல் வெப்சீரியஸாக தயாரிக்கபடவுள்ளது. அதற்கான ஆரம்ப பணிகள் நடைபெற்றுவருகின்றன ஒளிப்பதிவாளர் பாலமுருகன் இயக்கவுள்ள படத்திற்கான கதை திரைக்கதை வசனத்தை  எழுதியிருக்கிறேன்.

புத்தகத் திருவிழா

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளன. ஆனால் பார்வையாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. தேர்ந்த வாசகர்களே வருகிறார்கள்.  புத்தகங்களைத் தேடி வாங்குகிறார்கள். சென்ற ஆண்டு நான் ஷார்ஜா புத்தகத் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். அங்கே தமிழ் புத்தகங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதை அறிந்து அது குறித்து விரிவான கட்டுரை ஒன்றை தி இந்து நாளிதழில் எழுதியிருந்தேன். அந்தக் கோரிக்கையை ஏற்று  இந்த ஆண்டு பபாசியில் இருந்து ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் அரங்கு [...]

மன்னிக்கவும்

அறிவித்திருந்த படி இன்று மாலை ராயப்பேட்டை புத்தகத் திருவிழாவிற்கு வர முடியாதபடி அவசர வேலை. இப்போது தான் வீடு திரும்பினேன் வந்து காத்திருந்த வாசகர்கள் அனைவரிடமும்  மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாளை மதுரை செல்கிறேன் திங்கள் கிழமை வந்துவிடுவேன். அவசியம் திங்கள் மாலை புத்தகத் திருவிழாவிற்கு வருவேன். •• இரவு 9.05 18.08.2018

ராயப்பேட்டை புத்தகத் திருவிழா

ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெறும் 4வது சென்னை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி  பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது கடை எண் 117. நாளை சனிக்கிழமை 18 மாலை 4 :30 முதல் இரவு 8:30 வரை தேசாந்திரி அரங்கில் என்னைச் சந்திக்கலாம் திங்கள்கிழமை முதல் ஞாயிறுவரை மாலை நேரத்தில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கில் இருப்பேன். விருப்பமான  வாசகர்கள் சந்திக்கலாம். ••

அம்மாவின் கடைசி நீச்சல்

புதிய சிறுகதை ( அச்சில் வராதது) அம்மா நீந்தக்கூடியவர். நாங்கள் தெக்குடி என்ற சிறிய கிராமத்தில் குடியிருந்தோம். எங்கள் வீட்டிலிருந்து தென்பக்கமாகச் செல்லும் சாலை வழியாகச் சென்றால் ஏரியை அடையலாம். மிகப்பெரிய ஏரியது. பாண்டிய மன்னர் காலத்தில் உருவாக்கியது என்றார்கள். அந்த ஏரியைச் சுற்றிலுமாக மூன்று கிராமங்கள் இருந்தன. கிராமத்து விவசாயிகள் ஏரி தண்ணீரையே விவசாயத்திற்குப் பயன்படுத்தினார்கள். ஏரியின் நடுவில் சிறிய திட்டுப் போலிருக்கும். அதில் நீராட்சியம்மன் கோவில் இருந்தது. ஆண்டிற்கு ஒரு முறை நீராட்சி அம்மனுக்கு [...]

அடிக்குறிப்பு

ஜோசப் செடார் இயக்கிய புட்நோட் என்ற இஸ்ரேலிய திரைப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். 2011ம் ஆண்டு வெளியான படம். கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்றிருக்கிறது. ஒரு பேராசிரியரின் வாழ்க்கையை மையப்படுத்திய படமிது. அந்தக் காலப் பேராசிரியர்கள் எப்படியிருந்தார்கள், இன்று எப்படியிருக்கிறார்கள். அரிய ஆய்வுகள் செய்த பேராசிரியர்கள் ஏன் அங்கீகரிக்கபடாமல் போகிறார்கள். அற்பர்களுக்கு எப்படி விருதும் அங்கீகாரமும் கிடைக்கிறது, இதைப்பற்றித் தான் படம் பேசுகிறது. இந்தியாவில் வழங்கபடும் பல்வேறு விருதுகளில் இது போன்ற சர்ச்சைகள் எழுந்துள்ளன. [...]

பழிதீர்ப்பவன்

சிறுகதை : ஆன்டன் செகாவ் தமிழில் : மா. புகழேந்தி தனது மனைவியைக் கையும் களவுமாகப் பிடித்த சிறிது நேரத்தில் பியோடோர் பியோடோரோவித்ச் சிகேவ், துப்பாக்கிகள் விற்கும் ஷ்முக் அண் கோ வில், கைத்துப்பாக்கி ஒன்றை வாங்க நின்று கொண்டிருந்தான். அவனது வெளித்தோற்றம், ஆத்திரம் , சோகம் கலந்த கலவையாகவும் மாற்றமுடியாத உறுதி கொண்டவனாகவும் காட்டியது. “என்ன செய்ய வேணும்னு எனக்குத் தெரியும்”, தனக்குள் சொல்லிக்கொண்டான். “குடும்பத்தின் புனிதம் கேட்டு விட்டது, குலப்பெருமை சேற்றில் விழுந்து விட்டது. [...]

Archives
Calendar
August 2018
M T W T F S S
« Jul   Sep »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: