2018 October


Archive for October, 2018

ஒரு தீவு : இரண்டு பயணங்கள்

சமீபத்தில் பார்த்த இரண்டு திரைப்படங்களிலும் மையாக இருந்தது டஹிடி (Tahiti) தீவு. பசிபிக் கடலிலுள்ள இந்தத் தீவு ஒரு காலத்தில் கலைஞர்களின் கனவுதேசம். டஹிடி பாலினேசியாவில் உள்ள மிகப்பெரிய தீவாகும். ஒவியர் பால் காகின் (Gauguin) இந்தத் தீவிற்குச் சென்று வாழ்ந்து வரைந்த ஒவியங்கள் அதன் புகழை உலகெங்கும் பரவச் செய்தன. இன்றும் சுற்றுலா பயணிகள் டஹிடி தீவினை உல்லாச உலகமாகக் கருதியே பார்வையிட வருகிறார்கள். Gauguin: Voyage to Tahiti என்ற 2017ல் வெளியான திரைப்படம் [...]

அஞ்சலி

சிறந்த சிறுகதை ஆசிரியரும், முன்னோடி நாடக ஆளுமையுமான எழுத்தாளர் ந.முத்துசாமி இன்று சென்னையில் காலமானார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக முத்துசாமியோடு நெருங்கிப் பழகியிருக்கிறேன். அற்புதமான மனிதர். அவரது சிரித்த முகமும் அலாதியான குரலும், கைளை வீசிப் பேசும் பாணியும் மிகவும் வசீகரமானது. தமிழ் நவீன நாடகத்திற்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கியவர் முத்துசாமி. தெருக்கூத்தினைத் தமிழர்களின் அடையாளமாக உயர்த்திப்பிடித்தவர் . கூத்துப்பட்டறை என்ற நவீன நாடக அமைப்பை தோற்றுவித்துச் சிறப்பான நாடகங்களைத் தந்திருக்கிறார். அவரிடம் நடிப்பு பயின்றவர்களே இன்று [...]

காலம் மாறுகிறது

சென்றவாரம் புதுச்சேரிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அப்போது எழுத்தாளர் கி,ராஜநாராயணனைச் சந்திக்கச் சென்றிருந்தோம். கிராவை சந்தித்துத் திரும்பினால் சொந்த ஊருக்குப் போய்த் திரும்பியது போலப் புத்துணர்வு வந்துவிடும். கிராவிடம் நான் கண்ட முக்கிய அம்சம் எவரைப் பற்றியும் புரணி பேசினாலோ, எதிர்மறையாகப் பேசினாலோ பிடிக்காது. வேண்டாத விஷயங்களை ஏன் பேசிகிட்டு என்று ஒதுக்கிவிடுவார். அது போலவே நன்றாகயில்லை என்று தோணுகிற விஷயத்தை நேரடியாகச் சொல்லிவிடுவார். யாரையும் துதி பாட மாட்டார். 96 வயதில் அவர் புதிய நாவலை எழுதியிருக்கிறார் [...]

மேகங்களுக்கு அப்பால்

ஈரான் இயக்குனர் மஜித் மஜிதி (Majid Majidi) இயக்கிய Beyond the clouds பார்த்தேன். இந்தியாவில் அவர் படம் எடுக்கிறார் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அவர் ஒரு இந்திப்படம் எடுத்திருக்கிறார் என்பது படம் பார்த்தபிறகு தான் புரிந்தது. போதை மருந்து கடத்தி விற்பனை செய்யும் ஒருவனின் கதை. அவனது அக்கா தன்னைப் பலவந்தப்படுத்தியவரைத் தாக்கிவிடுகிறாள்.. இதனால் அவளைக் கைது செய்து சிறைக்கு அனுப்புகிறார்கள். சிறையில் அவள் என்னவாகிறாள் என்பது ஒரு புறம். மறுபுறம் தாக்கபட்டவனின் குடும்பம் என்ன [...]

கண்ணீர் சிந்தும் சிறுவர்கள்.

மனிதனின் நிர்கதியான நிலையைப் பதிவு செய்வதில் சங்க இலக்கியம் முன்னோடியாக உள்ளது. ஒரு மனிதன் நிர்கதியான நிலையில் தான் கடவுளை நம்பத்துவங்குகிறான். சகமனிதர்களை நோக்கிக் கைகூப்புகிறான். கருணையை வேண்டுகிறான். நிர்கதியின் போது உலகம் சிறியதாகிவிடுகிறது. காலமும் சூழலும் தான் நிர்கதியை உருவாக்குகிறது. போரில் வென்ற பின்பு மலையமானின் இரண்டுபிள்ளைகளை யானைக்காலில் இட்டு மிதிக்கச் சொல்லி ஆணையிடுகிறான் சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். அந்தக் கொடுஞ்செயலை எதிர்த்து கோவூர் கிழார் என்ற கவிஞர் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.  [...]

விகடனில்

இந்த வாரம் வெளியாகியுள்ள  ஆனந்த விகடன் தீபாவளி சிறப்பிதழில் எனது சிறுகதை வெளியாகியுள்ளது. ‘20.10.2018

பெங்களுர் புத்தகத் திருவிழா

பெங்களுர் புத்தகத் திருவிழா அக்டோபர் 15 முதல் பேலஸ் கிரவுண்ட் வளாகத்தில் நடைபெறுகிறது. அதில் எனது நூல்கள் யாவும் விற்பனைக்கு கிடைக்கின்றன. கடை எண்  L15  மீனாட்சி புக் ஷாப்.  பேலஸ் கிரவுண்ட். திரிபுரவாசினி கேட்.  பெங்களுர் தொடர்புக்கு அருணாசலம். 94432 62763 •••

நன்றி

சார்ஜா புத்தகத்திருவிழா குறித்து  பத்திரிக்கையாளர்  கமால் பாஷா எழுதியுள்ள குறிப்பு ••• ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் கடந்த 36 ஆண்டுகளாக பன்னாட்டு புத்தகத்திருவிழா நடைபெற்றுவருகிறது. பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமீரகத்தில் பணிபுரிந்துவருவதால், இந்த புத்தகத்திருவிழா பலனுள்ளதாக இருக்கிறது. இந்த திருவிழாவில் உலகின் பல நாடுகளில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான அரங்குகளில் லட்சக்கணக்கான நூல்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இந்தியாவிலிருந்து உருது, ஹிந்தி, மலையாளம், குஜராத்தி உள்ளிட்ட பல மொழி நூல்கள் கிடைக்கின்றன. ஆனால், தமிழ் [...]

இடக்கை – ஆங்கிலத்தில்

எனது இடக்கை நாவல் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. THE FINAL SOLITUDE   என தலைப்பு வைக்கபட்டுள்ளது. நாவலின் முதல் அத்தியாயத்தின் தலைப்பாக இருந்தது. மொத்த நாவலுக்கும் இந்தத்தனிமை பொருத்தமாக இருக்கும் என அதையே தேர்வு செய்தேன். zero degree publishing இதனை வெளியிட்டிருக்கிறார்கள் விலை ரூ 400. ப்ரீதம் சக்ரவர்த்தி இதனைச் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார் ஸ்ரீவித்யா சுபாஷ் எடிட் செய்துள்ளார். இவர்கள் அனைவருக்கும் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் உலகெங்கும் வாழும் எனது வாசகர்கள் இதனைத் [...]

சீன நிலக்காட்சி ஒவியங்கள்.

சீன நிலக்காட்சி ஒவியங்களைக் காணும் போது ஒவியன் தனக்கு வெளியேயுள்ள உலகை வரைந்தது போலவே தோன்றவில்லை. மாறாகக் காற்று, மலை, அருவிகள் யாவும் தனது வெளிப்பாட்டின் வடிவமே என்பது போலவே வரைந்திருக்கிறார்கள். குறிப்பாகப் பறவைகளை, விலங்குகளை ஐரோப்பிய ஒவியங்களைப் போலப் பெரியதாக வரையவில்லை. மாறாக அதன் இயல்பில், அதன் வடிவ அளவிலே வரைகிறார்கள். குரூர மிருகங்களை வரையும் போது அதன் குரூரரத்தை துல்லியமாகவே சித்தரித்திருக்கிறார்கள். பாறைகளைச் சீன ஒவியர்கள் அளவிற்கு உலகில் வேறு எவரும் வரைந்திருப்பார்களா எனத் [...]

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep   Nov »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: