2018 November


Archive for November, 2018

பனியில் ஒரு யாத்திரை

1974 ஆம் ஆண்டு இயக்குனர் வெர்னர் ஹெர்சாக்கிற்குப் பாரீஸில் இருந்து ஒரு தொலைபேசி வந்தது. அதில் அவரது நண்பரான லோட்டே ஐஸ்னர் என்ற எண்பது வயது பெண்மணி மரணப் படுக்கையில் இருக்கிறார். இன்னும் ஒரு சில தினங்களில் இறந்து போய் விடுவார் என்று தகவல் தெரிவிக்கபட்டது தனது தோழி சாகக் கூடாது. அவரைச் சாக விடமாட்டேன் என்று லோட்டே ஐஸ்னரைக் காண ம்யூனிச் நகரிலிருந்து பாரீஸிற்கு பாதயாத்திரை ஒன்றை மேற்கொண்டார் இயக்குனர் வெர்னர் ஹெர்சாக். (WernerHerzog). கடுங் [...]

லூக்கா எனும் மருத்துவர்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் பெர் லாகர்குவிஸ்ட் (Pär Lagerkvist) எழுதிய நாவல் அன்பு வழி (Barabbas ) .இதை தமிழில் மொழி பெயர்த்தவர் க நா சு. இந்நாவல் பாரபாஸ்  என்ற குற்றவாளியின் கண்ணோட்டத்தில் இயேசுவின் வாழ்க்கையை விவரிக்கக் கூடியது. பாரபாஸ் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. தனக்குப் பதிலாக இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள் என்பதை அறிந்த பாரபாஸ் அவரைப் பற்றித் தெரிந்து கொள்வதே நாவலின் மையக்கதை. பல லட்சம் பிரதிகள் விற்றுள்ள இந்நாவல் எனக்கு மிகவும் பிடித்தமானது. [...]

அஞ்சலி

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார். தமிழ் பிராமி கல்வெட்டுகளைக் கண்டுபிடித்துத் தொகுத்த  பெருமை இவரையே சாரும். அவரது மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.

தேவியின் திருப்பணியாளர்கள்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் திருப்பணியாளர்கள் குறித்த விரிவான ஆய்வினை மேற்கொண்டவர் கிரிஸ் புல்லர். இவர் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் மானுடவியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மீனாட்சியம்மன் கோவிலைப் பல்வேறு காலகட்டங்களில் கள ஆய்வு செய்து விரிவாக எழுதியிருக்கிறார். இந்த ஆய்வேடு தமிழில் வெளியாகியுள்ளது. தேவியின் திருப்பணியாளர்கள் என்ற நூலை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது. இந்நூலை தமிழாக்கம் செய்திருப்பவர் சி. நாகராஜபிள்ளை. மீனாட்சியம்மன் கோவிலைப் பற்றி இவ்வளவு விரிவாக ஒரு [...]

எனக்குப் பிடித்த கதைகள் -37

கடவுளின் பறவைகள் / மியா கூட்டோ (Mia Couto)  (மொஸாபிக் ) தமிழில்: பாலகுமார் விஜயராமன் •••• மன்னித்துக் கொள்ளுங்கள், ஒரு யாத்ரீகனைப் போல எனக்கு நதியைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. நீரலைகள் முடிவற்ற பயணத்தில் கடந்து சென்று கொண்டே இருக்கின்றன. எவ்வளவு காலமாக இப்படி பயணித்துக் கொண்டே இருப்பது, நீரின் வேலையாளாக இருந்திருப்பது? தனது பழைய வள்ளத்தில் தனியாக அமர்ந்திருந்த எர்னெஸ்டோ டிம்பா, தனது வாழ்வைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். பனிரெண்டாவது வயதில், நதியிலிருந்து மீன்களைப் [...]

ராக் இசைக்குழு எனும் கனவு

ரிமா தாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள Village Rockstars படம் பார்த்தேன். சமகால இந்திய சினிமாவில் உருவாகி வரும் புதிய அலைப்படங்களில் இது ஒரு சாதனை என்றே சொல்வேன். தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியால் கலையின் மீது விருப்பமுள்ள எவரும் ஒரு நல்ல சினிமாவை உருவாக்க செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டு ரிமா தாஸின் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ். அஸ்ஸாமைச் சேர்ந்த ரிமா தாஸ் எவரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்யவில்லை. திரைப்படப் பள்ளி எதிலும் சினிமா பயிலவில்லை. சுயமாகச் சினிமா கற்றுக் [...]

கொரியக் கவிதை

நாம் ஏன் புத்தனைத் தனியே விடக் கூடாது? புத்தனை ஒரு யானைச் சவாரி செய்ய வைக்கிறோம், ஒரு கிராமச் சிறுவன் ஒரு மனிதனின் தோளில் சவாரி செய்வது போல, மற்றும் நாம் புத்தனை ஓடவும் விளையாடவும் விடுகிறோம், பிறகு அவரை அழச் செய்கிறோம், மற்றும் நாம் அவரை ஒரு தயிர்க்காரப் பெண்ணுடன் ஆனந்தத்துடன் இணைய விடுகிறோம் மற்றும் அதைத் தந்திரா என்று அழைக்கிறோம், ஆனால் பிறகு நாம் அவரை வெறுமைக்குள் தானாக புன்னகை செய்யவிடுகிறோம், உட்காரச் செய்கிறோம், [...]

தடம் இதழில்

இம்மாத தடம் இதழில் வெளியான எனது கட்டுரை https://www.vikatan.com/thadam/2018-nov-01/column/145617-ramakrishnan-talks-about-chinese-poet.html

விளையாட்டுச் சிறுவர்கள்.

1850களில் நியூயார்க் நகர வீதியில் சுற்றியலைந்த பூட் பாலிஷ் போடும் சிறார்கள், பழம் விற்பவர்கள். பேப்பர் போடுகிறவர்கள். பூ விற்பவர்கள் என்று பல்வேறுவிதமான சிறார்களை ஒவியமாக வரைந்திருக்கிறார் ஜான் ஜார்ஜ் பிரவுன்.(John George Brown) சிறார்களை ஒவியமாக வரைந்தவர்களில் இவரே தனித்துவமானவர். குழந்தைப் பருவத்தைத் தனது ஒவியங்களுக்கான முக்கியக் கருப்பொருளாகக் கொண்டிருந்தார் பிரவுன். ஆரம்பக் காலத்தில் நடுத்தர வர்க்க குழந்தைகளை வரைந்தவர் பின்பு ஏழை, எளிய சிறார்களை அதிகம் வரைந்திருக்கிறார். இவரது பல முக்கிய ஒவியங்களின் ஒரிஜினல்களைக் [...]

நன்றி

தேசாந்திரி சார்பில் உருவாக்கபட்டுள்ள புதிய யூடியூப் சேனலை பதிவு செய்தவர்களுக்கு நன்றி. இதை அங்கீகரிக்கபட்ட சேனலாக மாற்ற கூடுதல் பதிவுகள் தேவை. குறைந்த பட்சம் பத்தாயிரம் பேர் இதில் இணையும் பட்சத்தில் வாரம் ஒருமுறை புதிய வீடியோ ஒன்றை வெளியிடலாம் என்று நினைக்கிறேன். சிறந்த திரைப்படங்கள், புத்தகங்கள், பயணம், சமூகம்  குறித்த  உரைகளை வெளியிட எண்ணம் பௌத்தம் குறித்த தொடர் உரை ஒன்றை இணையத்தில் வழங்கலாம் என்றும் நினைக்கிறேன். இதற்கான ஆரம்ப  வீடியோ  பணிகள் நடந்து வருகின்றன. [...]

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct   Dec »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: