2018 November 1


Archive for November 1st, 2018

கவிஞர் தேவதச்சனுக்கு விருது

கவிஞர் தேவதச்சனுக்கு இந்த ஆண்டிற்கான கவிக்கோ விருது வழங்கப்படுகிறது. கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் இந்த விருது ஒரு லட்சம் ரூபாய் பணமும் பாராட்டு பத்திரமும் கொண்டது. நவீன தமிழ் கவிதையுலகின் நிகரற்ற கவியாக விளங்கும் தேவதச்சனுக்கு இவ் விருது வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள். விருது வழங்கும் நிகழ்வு நவம்பர் 9 வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு வேலூர் சத்துவாச்சாரியிலுள்ள சோலை அரங்கத்தில் நடை பெறுகிறது.

அரவான்

பழைய புகைப்படங்களைத் தேடிக் கொண்டிருந்த போது அதில் அரவான் நாடகநிகழ்வின் புகைப்படங்கள் கிடைத்தன. அரவான் என்ற எனது நாடகத்தைப் பத்து ஆண்டுகளுக்கும் முன்பாக கருணாபிரசாத் இயக்கி நடித்தார். கருணா பிரசாத் கூத்துப்பட்டறையில் பயின்ற மிகச்சிறந்த நடிகர். தனக்கென ஒரு நாடகக்குழுவை நடத்திவருபவர். அரவான் நாடகத்தை அவருக்காகவே எழுதினேன். ஒரு நபர் நடிக்கும் அந்த நாடகம் 50 நிமிஷங்கள் நிகழக்கூடியது. மகாபாரதத்தில் குருஷேத்திரப் போருக்கு முன்பாக அரவான் களப்பலியிடப்படுகிறான். தன் மரணத்தின் முந்திய இரவில் அரவான் எப்படியிருந்தான் என்பதே [...]

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: