2018 November 6


Archive for November 6th, 2018

மோனேயின் நீர் அல்லிகள்

பிரெஞ்சு ஒவியரான க்ளாட் மோனே (Claude Monet – 1840-1926) இயற்கையை துல்லியமாக வரைவதில் முதன்மையானவர். இவரது ஒவியங்களை நியூயார்க் மார்டன் ம்யூசியத்தில் கண்டிருக்கிறேன் Water Lilies என்ற ஒவிய வரிசை அபாரமானது. இயற்கையின் பேரமைதியை தனது வண்ணங்களில் உருவாக்கி காட்டுகிறார் மோனே. இயற்கையை நேரில் காணும் போது பெரிய பொருட்கள் மட்டுமே கண்ணில் விழுகின்றன. அவற்றையே மனம் பிரதானமாக அவதானிக்கிறது. உள்வாங்கிக் கொள்கிறது. காற்றினால் தண்ணீரில் ஏற்படும் அலைகளையோ, ஒளி ஊடுருவி விளையாடுவதையோ. பூக்களின் திறந்த [...]

நுவ்வை

பிரெஞ்சு எழுத்தாளரும் சிறந்த திரைக்கதை ஆசிரியருமான ஜீன் க்ளாட் காரியரின்(jean claude carrier) நேர்காணல் ஒன்றை கண்டேன். அதில் விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் தொன்றுதொட்டு பின்பற்றிவரும் ஒரு பழக்கம் பற்றிக் குறிப்பிடுகிறார். அதாவது அவர்கள் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கும் போது அந்தச் சந்தோஷத்தின் அடையாளமாக ஒரு மரம் வைக்கப்படுமாம். காரியர் பிறந்த போது அவரது தந்தை வால்நட் மரத்தை வைத்திருக்கிறார். அது பதினெட்டு ஆண்டுகள் வளர்ந்து பின்பு விழுந்துவிட்டது என்கிறார் காரியர். அத்தோடு காரியர் தனது [...]

ஏங்கெல்ஸின் மனைவி

கார்ல் மார்க்ஸின் இணைற்ற நண்பனாகவும், சிறந்த தோழனாகவும் விளங்கியவர் ஃப்ரெடெரிக் ஏங்கெல்ஸ் ஏங்கெல்ஸின் மனைவி லிடியா எனப்படும் லிசி பென்ஸ் வாழ்க்கையை மையமாகக் கொண்டு புதிய நாவல்-Mrs Engels வெளியாகியுள்ளது. ஐரீஷ் எழுத்தாளரான கெவின் மெக்ரே இதனை எழுதியிருக்கிறார். லிசி பென்ஸ் தோழர் ஃப்ரெடெரிக் ஏங்கெல்ஸின் துணைவி. ஐரீஷ் பெண்ணான இவர் பஞ்சாலை ஒன்றில் சாயமிடும் தொழிலாளியின் மகள்., அவரது சகோதரி மேரி பர்ன்ஸை தான் ஏங்கெல்ஸ் காதலித்தார். மான்செஸ்டரில் மேரியுடன் ஏங்கெல்ஸ் ஒன்றாக வாழ்ந்த போது [...]

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: