2019 January


Archive for January, 2019

டெல்லி விழா

நாளை டெல்லி செல்கிறேன்.  29 மாலை சாகித்ய அகாதமி விருது விழா. சாகித்ய அகாதமி 31 காலை 10 மணிக்கு நேருக்கு நேர் நிகழ்ச்சியை ரவீந்திர பவனில் நடத்துகிறது.   ஆ. இரா. வேங்கடாசலபதியுடன் உரையாடுகிறேன் ஜனவரி 31  மாலை 7 மணிக்கு  டெல்லி தமிழ் சங்கத்தில் பாராட்டுவிழா. இரண்டிலும் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

பாராட்டு விழா

· நேற்று நடைபெற்ற இந்திய ரஷ்ய கலாச்சார நிகழ்வில் சாகித்ய அகாடமி விருது பெற்றதற்காக என்னைக் கௌரவித்தார்கள் ISRO தலைமை விஞ்ஞானி சிவதாணுபிள்ளை அவர்கள் பாராட்டு பட்டயம் வழங்கி கௌரவித்தார். நிகழ்விற்கு காரணமாக இருந்த ரஷ்ய கான்ஸ்லேட் ஜெனரல்  Oleg N. Avdeev அவர்களுக்கும், ரஷ்ய கலாச்சார மையத்தின் தங்கப்பன் அவர்களுக்கும்  நன்றி.

சைக்கிள் கமலத்தின் தங்கை

திருவல்லிக்கேணிக்குள் ஒராயிரம் சந்துகள் இருக்கின்றன. எந்தச் சந்திற்குள் கவிஞர் ஞானக்கூத்தன் வீடிருக்கிறது என அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஒருமுறை பைகிராப்ட் சாலையிலுள்ள நடைபாதை புத்தகக் கடை ஒன்றில் தேடிக் கொண்டிருந்த போது அருகில் ஞானக்கூத்தன் ஒரு ஆங்கிலப்புத்தகத்தைத் தேடி எடுத்துக் கொண்டிருப்பதை நாதன் கவனித்தான். அவர் ஞானக்கூத்தன் தானா?. அவரது கவிதைகளை வாசித்தவன் என்ற முறையில் அவரோடு பேச விரும்பினான். ஆனால் எப்படிப் பேசுவது. எவ்விதம் தன்னை அறிமுகம் செய்து கொள்வது எனத் தெரியவில்லை. நாதனுக்குத் திக்குவாய். சிறுவயதிலிருந்தே [...]

திருவல்லிகேணி

புத்தகக் கண்காட்சியில் தற்செயலாக எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் மகன் சாரங்கன் அவர்களைச் சந்தித்தேன். அவரோடு பல ஆண்டுகளுக்கு முன்பாகப் பள்ளியில் படித்த நண்பர்கள் சிலரும் உடனிருந்தார்கள். சாரங்கன் தனது தந்தையைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்து வருகிறார். விளம்பரப் படங்கள். ஆவணப்படங்கள் எடுப்பதில்  சாரங்கன் முன்னோடி கலைஞர். எந்தப் பள்ளியில் படித்தீர்கள் என்று கேட்டேன். திருவல்லிகேணி ஹிண்டு ஹைஸ்கூல் என்றார் சாரங்கன். எங்கள் பேச்சு திருவல்லிகேணியைப் பற்றித் திரும்பியது. சென்னையில் திருவல்லிகேணி மட்டும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து [...]

டெல்லி பயணம்

சாகித்ய அகாதமி விருது வழங்கும் விழா ஜனவரி 29 டெல்லி காமினி அரங்கில் நடைபெறவுள்ளது. விருது பெறுவதற்காக ஜனவரி 28 டெல்லி செல்கிறேன். ஒரு வார காலம் டெல்லியில் தங்கியிருப்பேன். இந்த நாட்களில் சாகித்ய அகாதமி நடத்தும்  Face to Face உள்ளிட்ட ஐந்து நிகழ்ச்சிகள் உள்ளன. விரிவான தகவல்களை இரண்டு நாளில் வெளியிடுகிறேன்

நன்றி

இந்த வருடப் புத்தகக் கண்காட்சியில் துவக்க நாள் முதல் இறுதி நாள் வரை அத்தனை நாட்களும் கலந்து கொண்டேன். ஒவ்வொரு நாளும் புதிய புதிய அனுபவம். வித விதமான வாசகர்கள். புத்தகங்களின் கடலுக்குள்ளாக நாளெல்லாம் நீந்தியபடியே இருந்தது மிகுந்த மனவெழுச்சி தந்தது. ஊடகங்கள் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு தந்த முக்கியத்துவம் மிகுந்த பாராட்டிற்குரியது. அன்றாடம் ஸ்ருதி டிவி மூலம் நேரலையில் புத்தகக் கண்காட்சி குறித்த எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன். நிறைய நூல்களைப் பரிந்துரை செய்தேன். ஐம்பதுக்கும் [...]

நிழல் எழுத்தாளர்

ஒருவர் எழுதி அது மற்றவர் பெயரில் வெளியாகி புகழ்பெறுவது உலகெங்கும் தொடர்ந்து நடந்து வரும் இலக்கியத்திருட்டு. பிரபலமான சிலருக்காக இப்படி வேலை செய்து தரக்கூடிய கோஸ்ட் ரைட்டர்ஸ் உலகெங்கும் இருக்கிறார்கள். அந்த எழுத்தாளர் யார் என வெளியுலகம் அறியாது. அவர்களும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். பணத்திற்காக இப்படித் தன்னை மறைத்துக் கொண்டு எழுதுபவர்களும் உண்டு. கட்டுபாட்டு, மற்றும் தணிக்கை, மோசடி என்று பல காரணங்கள் இதற்கு உள்ளன. அப்படி ஒரு கதையைத் தான் சொல்கிறது கோலெட் [...]

அக்காளின் எலும்புகள்

கவிஞர்  வெய்யில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர்.  சமகால நவீன தமிழ் கவிதையுலகில் தனித்துவமிக்க கவிதைகளை எழுதி வருபவர். அவரது சமீபத்தைய கவிதைகளின் தொகுப்பான அக்காளின் எலும்புகள் என்ற தொகுப்பை நேற்று வெளியிட்டேன்.  வடிவ ரீதியில் வெய்யில் கவிதைகள் புதிய அழகியலை உருவாக்குகின்றன . அருவெருப்பென நாம் ஒதுக்கியவற்றை பேருவுகையுடன் வெயில் ஆராதிக்கிறார். புத்துருவாக்கம் செய்கிறார். வெயிலின் கவிமொழி மரபும் நவீனமும் ஒன்றிணைந்து உருவானது. குற்றத்தின் நறுமணம் (மு.2011) – புதுஎழுத்து பதிப்பகம். கொஞ்சம் மனது வையுங்கள் [...]

கபீர் கவிதைகள்

புன்னகைக்கும் பிரபஞ்சம்’ – கபீர் கவிதைகள் | மொழிபெயர்ப்பாளர் செ.செங்கதிர் வெளியீட்டு விழா. எஸ்.ராமகிருஷ்ணன் உரை | புன்னகைக்கும் பிரபஞ்சம் – கபீர் கவிதைகள் | S.Ramakrishnan speech https://www.youtube.com/watch?v=p3t3DHAdadc&fbclid=IwAR1Qs6vqroA3AZTpgAQO3IskgQvA3LyXxCC9AaNP5aPqAObot8Tz-DVF9So நன்றி ஸ்ருதி டிவி

எனது பரிந்துரை

புத்தகக் கண்காட்சியில்  வாங்குவதற்கான எனது பரிந்துரை தனது 96 வது வயதில் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் எழுதியுள்ள புதிய நாவல். அவரது கையெழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது இந்த இவள் /கி.ராஜநாராயணன் ( புதிய நாவல்) காலச்சுவடு பதிப்பகம் விலை: ரூ.175 இம்பர் உலகம் /ஞானக்கூத்தன் கவிதைகள் ( மிகச்சிறந்த கவிதைகள்) நவீன விருட்சம் வெளியீடு அசோகமித்ரன் உரையாடல்கள் ( நேர்காணல்கள்) நவீன விருட்சம் சொற்கள் ( மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு கவிதைகள்) ழாக் பிரெவர் கவிதைகள் க்ரியா பதிப்பகம் மதுரம் [...]

Archives
Calendar
January 2019
M T W T F S S
« Dec   Feb »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: