2019 January


Archive for January, 2019

ஆசி.கந்தராஜாவின் புனைவுக்கட்டுரைகள்

ஆசி. கந்தராஜா ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்துப் படைப்பாளி. சிறந்த கட்டுரையாசிரியர். சிறுகதை எழுத்தாளர். தாவரவியல் அறிஞர். பேராசிரியராகப் பணியாற்றுகிறார். சில மாதங்களுக்கு முன்பு இவர் சென்னை வந்திருந்த போது சந்தித்து உரையாடினேன். அற்புதமான மனிதர். இவரது இரண்டு நூல்களைச் சமீபத்தில் வாசித்தேன் முதலாவது செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய். இது ஆஸ்திரேலியாவில் யாழ்பாணத்து கத்திரிக்காய் ஒன்றை ஒட்டுமுறையில் விளைவிக்க முயன்றதை பற்றிய வேடிக்கையான நிகழ்வை விவரிக்கும் கட்டுரை. இதில் வரும் மாமி மறக்கமுடியாத கதாபாத்திரம். நினைவுகளில் ஊடாடிச் [...]

கபீர் கவிதைகள்

செங்கதிர் அவர்களின் மொழியாக்கத்தில் கபீரின் கவிதைகள் வெளியாகின்றன. புன்னகைக்கும் பிரபஞ்சம் என்ற இந்நூலின் வெளியீட்டுவிழா ஜனவரி 11 மாலை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறவுள்ளது

புத்தக் கண்காட்சி மூன்றாம் நாள்

இன்று புத்தகக் கண்காட்சியினுள் மிகப்பெரிய கூட்டம். விடுமுறை தினம் என்பதால் நிரம்பி வழிந்தது கண்காட்சி.  இத்தனை வாசகர்களை காண்பது மிகுந்த சந்தோஷம் தரக்கூடியது.  கடந்த இரண்டு நாட்களாக தொண்டைவலி. அதன் காரணமாகத் தொண்டைகட்டிக் கொண்டுவிட்டது.  சரியாகப் பேசமுடியாத சிரமம்.  என் அம்மா உங்கள் வாசகர், எனது அக்கா உங்களது வாசகர் என்று சொல்லி புத்தகம் வாங்கிப்போகும் இளைஞர்களை கண்டேன். ஒரு வாசகர் தன் அம்மாவிற்காக எனது புத்தகங்களில் 25யை ஒரே நேரத்தில் வாங்கிக் கொண்டு வந்து கையெழுத்து [...]

புத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள்

தேசாந்திரி அரங்கு எண் 220, 221ல் இன்று நிறைய வாசகர்களைச் சந்தித்து உரையாடினேன்.  அமெரிக்காவிலிருந்து வந்திருந்த  நம்பி நாராயணன் அவர்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி தந்தது. புத்தகக் கண்காட்சிக்குள் வாகனத்தில் போய் வருவது  ராணுவ முகாம் ஒன்றுக்குள் போய் வருவது போல அத்தனை கஷ்டமாக உள்ளது. எத்தனை தடுப்புகள். எவ்வளவு கெடுபிடிகள். குழந்தைகள் பெரியவர்களை அலையவிடுகிறார்கள். இத்தனை மோசமான வாகன வழித்தடைகள் இதன் முன்பு கண்டதேயில்லை. அதிலும் பாதுகாப்பு பணியில் நியமிக்கபட்டுள்ளவர்கள் பார்வையாளர்களை நடத்துகிற விதம் அராஜகம்.  [...]

புத்தகக் கண்காட்சியில் முதல்நாள்

புத்தகக் கண்காட்சியின் முதல் நாள் இரவு 7 மணிக்கு தான் அரங்கில் பார்வையாளர்கள் அனுமதிக்கபட்டார்கள். முதல்வர் வருகையை முன்னிட்டு காவல்துறையின் அதிக கெடுபிடி. பாதுகாப்பு சோதனைகள். ஏதோ சர்வதேச விமான நிலையத்திற்குள் போவது போலிருந்தது. நண்பர் பா.ராகவனின் யதி நாவலை தினமணி பினாகிள் பதிப்பக அரங்கில் வெளியிட்டேன். நண்பர்கள் அகரமுதல்வன். லட்சுமி சரவணக்குமார் ஹரன் பிரசன்னா   போன்றவர்களைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன்.  தேசாந்திரி அரங்கில் இருந்து ஸ்ருதி டிவி சிறிய நேரலை ஒன்றை செய்தது.   நன்றி கபிலன். [...]

வாழ்த்துகள்

இந்திய ஊடகவியலாளர்களின் மதிப்புமிக்க விருதாக கருதப்படும், தலைசிறந்த ஊடகவியலாளருக்கான ‘ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது’ நியூஸ் 18 தமிழ்நாடு முதன்மை ஆசிரியர் மு.குணசேகரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள். சமூக அக்கறையுடன் நேரடியாக களத்திற்கே சென்று செய்திகளை ஆராய்ந்து மறைக்கபட்ட உண்மைகளை உரத்து சொல்லி வரும் குணசேகரன்  மிகுந்த பாராட்டிற்குரியவர். தேசிய அளவிலான விருது அவரது செயல்பாடுகளுக்கு கிடைத்த சரியான அங்கீகாரம். அவரது இதழியல் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

புத்தகக் கண்காட்சியில்

சென்னை புத்தகக் கண்காட்சி இன்று துவங்குகிறது தினமும் மாலை 4 மணி முதல் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு எண் 220 மற்றும் 221 ல் இருப்பேன் விருப்பமான வாசகர்கள் சந்திக்கலாம். ••• விகடன் வெளியிட்ட துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி, எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா ஆகிய நூல்கள் யாவும் தேசாந்திரியில் புதிய பதிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.

அரிய புகைப்படங்கள்

நாதஸ்வர மேதை காருகுறிச்சி அருணாச்சலம் அவர்கள் சிவாஜி, ஜெமினியுடன் மிகுந்த நட்பாகப் பழகினார். காருகுறிச்சியாரின் சில அரிய புகைப்படங்கள்

தேசாந்திரி அரங்கு எண்

அரவான் நாடகம்

டிசம்பர் 30 மாலை புதுவைப் பண்பாட்டு மையத்தில் அரவான் நாடகம் சிறப்பாக அரங்கேறியது.   நண்பர் சுகுமார் சண்முகம் இயக்கி நடித்திருந்தார். அரவான் நாடகத்தைக் காண அரங்கு நிறைய பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். பத்தாண்டுகள் முன்பாக கருணா பிரசாத் இந்த நாடகத்தை தீப்பந்த வெளிச்சத்தில் மாறுபட்ட நிகழ்வாக  உருவாக்கியிருந்தான். அதிலிருந்து மாறுபட்டு  சுகுமார்  மரபுக்கலைகளுடன் இணைத்து இந்த நாடகத்தை புதிய வடிவில் நிகழ்த்தியது   பாராட்டிற்குரியது. அரங்க அமைப்பு. ஒளி.  உடைகள், இசை பாடல்கள் பொம்மலாட்டம் என அத்தனையும் சிறப்பாக இருந்தன. [...]

Archives
Calendar
January 2019
M T W T F S S
« Dec   Feb »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: