2019 January 3


Archive for January 3rd, 2019

அரிய புகைப்படங்கள்

நாதஸ்வர மேதை காருகுறிச்சி அருணாச்சலம் அவர்கள் சிவாஜி, ஜெமினியுடன் மிகுந்த நட்பாகப் பழகினார். காருகுறிச்சியாரின் சில அரிய புகைப்படங்கள்

தேசாந்திரி அரங்கு எண்

அரவான் நாடகம்

டிசம்பர் 30 மாலை புதுவைப் பண்பாட்டு மையத்தில் அரவான் நாடகம் சிறப்பாக அரங்கேறியது.   நண்பர் சுகுமார் சண்முகம் இயக்கி நடித்திருந்தார். அரவான் நாடகத்தைக் காண அரங்கு நிறைய பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். பத்தாண்டுகள் முன்பாக கருணா பிரசாத் இந்த நாடகத்தை தீப்பந்த வெளிச்சத்தில் மாறுபட்ட நிகழ்வாக  உருவாக்கியிருந்தான். அதிலிருந்து மாறுபட்டு  சுகுமார்  மரபுக்கலைகளுடன் இணைத்து இந்த நாடகத்தை புதிய வடிவில் நிகழ்த்தியது   பாராட்டிற்குரியது. அரங்க அமைப்பு. ஒளி.  உடைகள், இசை பாடல்கள் பொம்மலாட்டம் என அத்தனையும் சிறப்பாக இருந்தன. [...]

புத்தாண்டு இரவு

2019 புத்தாண்டு துவங்குவதை முன்னிட்டு தேசாந்திரி பதிப்பகத்தில் வாசகர்களின் சந்திப்பு நடைபெற்றது. நிறைய இளைஞர்கள். குழந்தைகளுடன் குடும்பமாக சிலர் வந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சி தந்தது. இலக்கியம்,  சமகாலப் பிரச்சனைகள், கல்வி, பண்பாடு, வரலாறு, சினிமா, தத்துவம் என பல்வேறு விஷயங்களைத் தொட்டு உரையாடினோம்.   இனியதாக புத்தாண்டு துவங்கியுள்ளது.  இந்த மகிழ்ச்சி எல்லோருக்கும் ஆண்டு முழுவதும் நீடிக்கட்டும். புத்தாண்டு துவங்கியதும் காலையில் Memories Look at Me:  Tomas Transtromer என்ற புத்தகம் படித்தேன். நோபல் பரிசு பெற்ற [...]

Archives
Calendar
January 2019
M T W T F S S
« Dec   Feb »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: