2019 February


Archive for February, 2019

கைக்கடிகாரமெனும் சிற்பம்.

Watchmaker Masahiro Kikuno – In Tune with Time என்ற டாகுமெண்டரி திரைப்படத்தைப் பார்த்தேன். சர்வதேச அளவில் கைக்கடிகாரங்களை வடிவமைப்பு செய்யும் மசஷிரோ கிகுனா என்ற இளைஞரின் உலகை ஆவணப்படுத்தியுள்ளது இப்படம். ஜென் துறவி ஒருவர் கைக்கடிகாரம் செய்ய முற்படுவது போல அத்தனை நிதானமாக, ஆழ்ந்த புரிதலுடன் அசாத்தியமான கலைத்திறமையுடன் கிகுனா கைக்கடிகாரங்களைத் தயாரிக்கிறார். இந்த ஆவணப்படம் கடிகாரம் தயாரிப்பதை மட்டும் காட்சிப்படுத்தவில்லை. காலத்தை நாம் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறோம். எப்படிக் கையாளுகிறோம். காலம் என்பதை [...]

திருவண்ணாமலையில்

நாளை எனது நண்பர்  பவா.செல்லத்துரை திருவண்ணாமலையில் உண்டாட்டு என்ற சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார். திருவண்ணாமலை எனது தாய்வீட்டினைப் போன்றது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் நட்பு. . பவா வீடு தான் என்னையும் உருவாக்கியது. அவரது பெற்றோர்கள்  காட்டிய அன்பு நிகரற்றது பவா மற்றும் கருணா, சந்துரு தோழர். எஸ்.கே.பி.கருணா, ஷைலஜா, ஜெயஸ்ரீ ,உத்ரா, வம்சி, மானசி, சகானா, அம்மம்மா  எனத் தோழமையின் துணையே என்னை வளர்த்தது. எனது எல்லா சந்தோஷங்களும் திருவண்ணாமலையில் கொண்டாடப்பட்டவையே. இம்முறை [...]

ஆசிர்வதிக்கப்பட்ட நாள்.

நேற்று என்னுடைய சொந்த ஊரான மல்லாங்கிணறு கிராமத்தில்  சாகித்ய அகாதமி விருது பெற்றதற்கான பாராட்டுவிழா நடைபெற்றது.  இதுவரை நடைபெற்ற நிகழ்வுகளில் இதுவே மிகச்சிறந்தது என்று சொல்வேன். எங்கள் கிராமமே ஒன்று கூடி ஒரு விழா எடுப்பது இதுவே முதன்முறை. இந்த நிகழ்விற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தவர்கள் அருமை நண்பரும் , சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தன்னரசு, மற்றும் அவரது சகோதரி கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன். அவர்களுக்கு என் இதயம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊரின் [...]

மல்லாங்கிணரில்

எனது சொந்த ஊரான மல்லாங்கிணரில் எனக்கொரு பாராட்டு விழா நடைபெறுகிறது.  சட்டமன்ற உறுப்பினரும் எனது நண்பருமான தங்கம் தென்னரசு,  அவர்களின் சகோதரி கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் இருவரும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். எங்கள் கிராமத்தில் இது போன்ற இலக்கிய நிகழ்வு நடைபெறுவது இதுவே முதன்முறை. நிகழ்வில் எனது ஆசான் எஸ். ஏ. பெருமாள். எனது நண்பரும் நாடறிந்த பேச்சாளருமான பாரதி கிருஷ்ணகுமார், பர்வீன் சுல்தானா, அண்ணன் மருத்துவர் வெங்கடாசலம்,  திரைக்கலைஞர் இளவரசு,  ஊடகவியலாளர் சுஜிதா [...]

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா மூன்றாம் ஆண்டில் சிறப்பாக துவங்கியுள்ளது. 15.02.2019 துவக்க நாளின் உரையை நான் நிகழ்த்தினேன். நண்பர் தங்கம் மூர்த்தி இதற்கு முக்கிய காரணமாக விளங்கினார். தேசாந்திரி பதிப்பகம் இந்த கண்காட்சியில் அரங்கு அமைத்துள்ளது.  கவிஞர் முத்துநிலவன்,  பேராசிரியர் கருப்பையா,  வரதன் உள்ளிட்ட நண்பர்கள் பலரையும் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சி அளித்தது.  நிகழ்வை ஒருங்கிணைத்த அனைவருக்கும் நன்றிகள்

பல்கலைக்கழகத்தில்

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் எனக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. இதை துணைவேந்தர் பாஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வினைச்  சிறப்பாக வடிவமைத்து ஏற்பாடு செய்தவர் சிறந்த கல்வியாளரும் எழுத்தாளருமான முனைவர் அ.ராமசாமி. ஒரிசாவின் முன்னாள் கவர்னர் எம்.எம். ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்வில் பேராசிரியர் தி.சு. நடராஜன், எழுத்தாளர் ரவிக்குமார். எழுத்தாளர் இமயம், எழுத்தாளர் சோ.தர்மர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மதிய அமர்வில் விமர்சகர் முருகேச பாண்டியன். விமர்சகர் நவீனா, மற்றும் [...]

மதுரையில்

மதுரை எட்வர்ட் ஹாலில் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது. நிகழ்வை  மாவட்ட செயலாளர் சாந்தாராம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். நிறைய இளைஞர்கள் கூட்டம்.  இருக்கைகள் நிரம்பி நிறையப் பேர் நின்று கொண்டேயிருந்தார்கள். கவிஞர் ஸ்ரீரசா முன்னிலை வகித்து நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்தார். சஞ்சாரம் நாவலைப் பாராட்டி மக்கள் கலைவாணர் நன்மாறன் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் எனது படைப்புகள் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். ந.ஸ்ரீதர் வாழ்த்துரை வழங்கினார், மதுரை [...]

கோவில்பட்டியில்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் எனக்கு பாராட்டு விழா நடைபெற்றது. எழுத்தாளர் உதயசங்கர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வில் அண்ணன் தமிழ்செல்வன்  , மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ், எழுத்தாளர் பூமணி,   நெல்லை நாறும்பூநாதன்  சோ.தர்மர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். எனது சிறுகதைகள் குறித்து தமிழ் செல்வன் சிறப்பாக உரையாற்றினார். இது போலவே எனது நாவல்கள் குறித்து சா. தேவதாஸ் ஆழ்ந்த உரையை நிகழ்த்தினார். நண்பர்கள் சாரதி ,பொன்னுசாமி உள்ளிட்ட பலரையும் சந்தித்தது [...]

திருநெல்வேலியில்

கடந்த செவ்வாய்கிழமை திருநெல்வேலியில்  நான் சாகித்ய அகாதமி பெற்றதற்காக பாராட்டுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வின் சிறப்பு நாதஸ்வரக் கலைஞர் காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் மனைவி இராமலட்சுமி அம்மாள் வந்து ஆசி வழங்கியது. அவருக்கு வயது 96. காய்ச்சல் காரணமாக உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு நிகழ்விற்கு வந்திருந்தார். நிகழ்வு முழுவதுமிருந்தார் . என் தலைதொட்டு ஆசி வழங்கினார்.  நிகழ்வில்  நிறைய நாதஸ்வரக்கலைஞர்கள் வந்து கலந்து கொண்டு எனக்குச் சிறப்பு செய்தார்கள். நிகழ்வை [...]

நித்தியத்தின் நுழைவாயில்

ஒவியஉலகில் வின்சென்ட் வில்லியம் வான்கோ என்பது ஒரு பெயரில்லை. அது ஒரு தனித்துவமிக்க அடையாளம். நவீன ஒவியர்களுக்கு அவர் நிகரற்ற கலைஞன். பேராசான். அவரது வண்ணங்களைப் போலக், கோடுகளைப் போல வரைந்துவிடமுடியாதா என்ற ஏக்கம் இளம் ஒவியர்களுக்கு எப்போதும் உண்டு. உன்மத்த நிலையில் வான்கோ வரைந்த ஒவியங்கள் உலகமே பற்றி எரிவது போலவே காட்சிப்படுத்தபட்டிருக்கிறது. கௌதம புத்தர் தனது முதற்சொற்பொழிவை சாரநாத்திலுள்ள மான்பூங்காவில் ஆற்றினார். அந்த உரையில் உலகம் முழுவதும் நெருப்பு இடையுறாமல் எரிந்து கொண்டேயிருக்கிறது. அதை [...]

Archives
Calendar
February 2019
M T W T F S S
« Jan   Mar »
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
Subscribe

Enter your email address: