2019 March


Archive for March, 2019

பஷீரின் நாடகம்

நேற்று புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறை சார்பாக நடைபெற்ற  வைக்கம் முகமது பஷீரின் மூன்று சீட்டுக்காரனின் மகள் சிறுகதையைத் தழுவிய வை ராஜா வை என்ற நாடகம் பார்க்கப் போயிருந்தேன். நண்பரும் நடிகருமான சுகுமார் இந்த நாடகம் குறித்துத் தெரிவித்திருந்தார். புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தினுள்ளே அரங்கை உருவாக்கியிருந்தார்கள். ஒரு மரத்தடி அதைச் சுற்றி அரங்க அமைப்பு.  ஏராளமான மாணவர்கள் நாடகம் பார்க்க வந்திருந்தார்கள். பஷீரே தனது கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி நாடகத்தைத் துவக்கி வைப்பது போல அமைத்திருந்தார்கள். வைக்கம் முகமது [...]

இரண்டு நகரங்கள்

டால்ஸ்டாயின் அன்னாகரீனினா நாவலை விவாதிப்பதற்கென நிறையக் குழுமங்கள் இணையத்தில் இருக்கின்றன. அப்படி ஒரு குழுமத்தில் பகிரப்பட்ட கட்டுரை ஒன்றை சமீபத்தில் வாசித்தேன். அது அன்னாகரீனினா மாஸ்கோவில் வாழ்ந்திருந்தால் இப்படி நடந்து கொண்டிருக்க மாட்டாள் அவள் வாழ்க்கை வேறுவிதமாக அமைந்திருக்கும் என்று கூறி மாஸ்கோ, பீட்டர்ஸ்பெர்க் இரண்டு நகரங்களுக்குமான வேறுபாட்டை, அதன் வாழ்க்கை முறையைக் கொண்டு நாவலின் மையத்தை புதிய கோணத்தில் அணுகுகிறது. அன்னாகரீனினா நாவல் 1878ல் வெளியான நாள் முதல் இன்று வரை தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. [...]

சிங்கிஸ் ஐத்மாத்தவ்

கிர்கிஸ்தான் சோவியத் குடியரசில் ஒன்றாக இருந்த நாடு. இதன் வடக்கில்  இந்நாட்டின் வடக்கில் கசக்கிஸ்தான், மேற்கில் உஸ்பெகிஸ்தான், தென்மேற்கில் தஜிகிஸ்தான், மற்றும் கிழக்கில் சீன மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. கிர்கிஸ்தானின் தேசிய படைப்பாளியாக கொண்டாடப்படுகிறவர் சிங்கிஸ் ஐத்மாத்தவ். இவரது நாவல்களில் குல்சாரி, முதல் ஆசிரியர், ஜமீலா, சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று, ஒட்டகக் கண் போன்றவை தமிழில் வெளியாகியுள்ளன. சிங்கிஸ் ஐத்மாத்தவ்(Chinghiz Aitmatov) மிகச்சிறந்த படைப்பாளி.  இவரது நாவல்கள் யாவும் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளன. தங்கள் [...]

என் வாழ்க்கைப் போர்

தமிழ் அறிஞர் சி.இலக்குவனார் அவர்களின் சுயசரிதையான என் வாழ்க்கைப் போர் என்ற நூலை வாசித்தேன். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேடு கிராமத்தில் 1909 ஆம் ஆண்டு எளிய குடும்பத்தில் பிறந்தவர் இலக்குவனார். இவரது வாழ்க்கை வரலாறு நூறு வருஷங்களுக்கு முன்பு நாகை பகுதி கிராமங்கள் எப்படியிருந்தன. கிராமப்புற வாழ்க்கையில் கல்வி பெற எவ்வளவு போராட வேண்டியிருந்தது என்பதன் சாட்சியமாகவுள்ளது. கிராமத்தில் பெட்டிக்கடை வைத்திருந்த இலக்குவனாரின் தந்தை ஒரு நாள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகிறார்.. அந்த நாட்களில் வயிற்றுப்போக்கு வந்தால் இறந்து போய்விடுவார்கள் என்ற பயம் [...]

மதுரையின் திருவிழா

தேரோடும் எங்க சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம் என்ற திரைப்படப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் மதுரையின் திருவிழா நினைவுகள் வந்து போகும் மாட்டுவண்டி கட்டி சித்திரைத் திருவிழாவிற்கு போய் வந்த பால்ய வயதின் நினைவுகள் பசுமையாகயிருக்கிறது. மதுரையைப் பற்றி நிறையப் புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் இத்தனை அழகான புகைப்படங்களுடன் திருவிழா குறித்த தகவல்களுடன் மதுரையின் பண்பாட்டுச் சிறப்புகளை விவரிக்கும் ஒரு புத்தகம் இதுவரை வந்ததில்லை. அப்படி ஒரு நூலை சித்திரவீதிக்காரன் எழுதியிருக்கிறார் நண்பர் முத்துகிருஷ்ணன் நடத்தும் பசுமை [...]

தினமலர் – நேர்காணல்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கரிசல் பூமியில் பிறந்தவர். இவரது கதைகளை வாசிப்பது மிகு மழையின் ஊடே நனைந்து வீடு திரும்புவதை போன்ற அனுபவம். அங்கே காற்று, மழை, குளிர்ச்சி, பாதுகாப்புத் தேடும் மனநிலையும், யாவையும் மீறி இயற்கையில் ஒன்றுகலக்கும் தருணமும் ஒருங்கே கூடியிருக்கின்றன. தனக்கென தனித்துவமான கவித்துவ கதை சொல்லும் மொழி, கதைக்களங்கள் கொண்டவர். புனைவெழுத்தில் சாதனைகள் நிகழ்த்தியவர். நவீன தமிழ் சிறு கதையில் புதிய போக்குகளை உருவாக்கியவர். முழு நேர எழுத்தாளர். சினிமா வசனகர்த்தா. கரிசல் [...]

சிரிப்பின் பின்னால்.

லாரல் மற்றும் ஹார்டி (Laurel and Hardy) இருவரும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நகைச்சுவை இரட்டையர்கள். ஒல்லியான ஸ்டேன் லாரல் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். குண்டான ஆலிவர் ஹார்டி அமெரிக்கர். ஸ்லாப்ஸ்டிக் நகைச்சுவையில் இவர்கள் தலைசிறந்த கலைஞர்கள். இவர்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் Stan & Ollie என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். 2018ல் வெளியான படமது. நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கையை விவரிக்கும் என்றாலும் படம் நகைச்சுவை கொண்டதாக மட்டுமில்லை. இரண்டு திரைக்கலைஞர்களின் புறக்கணிக்கபட்ட வலியை, நிராகரிப்பின் வேதனையை மிகச்சரியாகப் பதிவு [...]

பெலினி காத்திருக்கிறார்

பெலினியின் நண்பரும், ஒவியரும், சக அலுவலருமான Ettore Scola இயக்கத்தில் உருவான ஆவணப்படமான How Strange to Be Named Federico பெலினியின் கலை மற்றும் திரைவாழ்வை அழகாகச் சித்தரிக்கிறது. குறிப்பாகப் பெலினியின் திரைப்படம் போலவே முன்பின்னாகவும், கனவுத் தன்மை கொண்டதாகவும் ஆவணப்படத்தை ஸ்கோலா உருவாக்கியிருக்கிறார். ஸ்கோலா இத்தாலிய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். மாஸ்கோ திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் விருது பெற்றவர். முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். பெட்ரிக்கோ பெலினி (Federico [...]

செசானும் எமிலி ஜோலாவும்

வாழ்வில் வெற்றியடைவது எல்லோருக்கும் எளிதாக நடந்துவிடுகிற விஷயமில்லை. அதுவும் இரண்டு நண்பர்களில் ஒருவன் பெயரும் புகழும் அடைந்த பிறகு மற்றவன் வெறும் ஆளாக, எந்த அங்கீகாரமும் வருமானமின்றி இருக்க நேரிடும் எனில் அவர்களுக்குள் உள்ள உறவில் கசப்பே மிஞ்சும். சிலரது மேதமை அவர்கள் வாழ்வின் இறுதிக்கட்டத்தை அடையும் போது தான் அறியப்படுகிறது. கொண்டாடப்படுகிறது. வான்கோ வாழ்ந்த போது அவரது ஒரு ஒவியம் கூட விற்பனையாகவில்லை. பணமில்லாமல் அவதிப்பட்டார். இன்று ஒரு ஒவியத்தின் விலை ஐநூறு கோடிக்கும் மேல். [...]

நாசகார உலகம்.

தி.ஜானகிராமன் சிறுகதை ஒன்றினை இன்று வாசிக்கும் போது ஒரு வரி சட்டென்று நிறுத்தியது. அந்த வரியைக் கடந்து போக முடியவில்லை. வாசித்தவுடன் முதலில் சிரிப்பு வந்தது. பின்பு மெல்ல சிரிப்பு மறைந்து இது உண்மையிலே நாசகாரச் செயல் தான் என்று உறைக்கவும் செய்தது. சண்பகப் பூ என்றொரு சிறுகதை. 1948ல் எழுதியிருக்கிறார். கதை முழுவதும் ஒரு பெண்ணின் அழகைப் பற்றிய வியப்பு. ஆராதனை தான். லா.ச.ராவை படிக்கிறோமோ என்று எண்ணும்படியாக இருந்தது. ஆனால் லா.ச.ரா பெண்ணை தெய்வநிலைக்குக் [...]

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb   Apr »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: