2019 March 1


Archive for March 1st, 2019

போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்

காலச்சுவடு இதழில் வெளியான எனது புதிய சிறுகதை. ** வின்சென்ட் போயர்பாக் என்ற ஜெர்மானிய ஒவியன் ஒரு சிறுநூலை எழுதியிருக்கிறான். மணலின் நடனம் என்று பெயரிப்பட்ட அந்த நூலில் ஏழு கட்டுரைகள் உள்ளன. போயர்பாக்கை பற்றி எவ்விதமான குறிப்புகளும் அந்த நூலில் இல்லை. ஆனால் அவன் 1912 முதல் 1919 வரை ஏழு ஆண்டுகள் இந்தியாவில் சுற்றியலைந்திருக்கிறான் என்பதும் கிழக்கிந்திய கம்பெனியின் ஒவியர்களுக்கு உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறான் என்பதும் அந்த நூலில் உள்ள கட்டுரைகளின் வழியாகப் புரிந்து கொள்ள [...]

அசோகன் சருவிலோடு ஒரு நாள்

மலையாளச் சிறுகதையுலகில் மிக முக்கிய எழுத்தாளர் அசோகன் சருவில். இவரது இரண்டு புத்தகங்கள் என்ற சிறுகதை தொகுப்பு தமிழில் வம்சி வெளியீடாக வந்துள்ளது. சுகானா மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தப் புத்தகம் சென்றவாரம் புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சியில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலிற்கான விருதைப் பெற்றுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு திருச்சூர் சென்றிருந்த போது அசோகன் சருவில் அவர்களைச் சந்தித்து உரையாடினேன். சிறந்த பண்பாளர். எளிமையானவர். சருவிலின் கதைகள் எளிய மனிதர்களின் துயரங்களைப் பேசுபவை. வடிவ உத்திகளை விடவும் வாழ்வின் [...]

எல்லை கடக்கும் சர்க்கஸ்

ஹாலிவுட்டின் நிகரற்ற இயக்குனர் எலியா கஸான். இவரது திரைப்படங்கள் இன்றும் திரைப்பள்ளிகளில் பாடமாகப் பயிலப்படுகின்றன. நடிகர்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதிலும், காட்சிகோணங்களைப் புதிதாக வடிவமைப்பதிலும், உணர்ச்சிபூர்வமான காட்சிகளை அழுத்தமாகக் கையாளுவதிலும் எலியா கஸான் தனித்துவமிக்கவர். மார்லன் பிராண்டோவை திரைநட்சத்திரமாக உருவாக்கியவர் இவரே. போரும் வாழ்வும், குற்றமும் தண்டனை, மேடம் பவாரி போன்ற செவ்வியல் நாவல்களை வாசிக்கும் போது நாம் கதாபாத்திரங்களின் உருவாக்கம் மற்றும் கதையை எடுத்துச் செல்லும் விதத்தைக் கண்டு வியக்கிறோம். பாராட்டுகிறோம். அதே அனுபவத்தைத் திரையில் [...]

உண்டாட்டு

திருவண்ணாமலையில் நடைபெற்ற உண்டாட்டு நிகழ்வு இலக்கியத் திருவிழா போல நடைபெற்றது. பெங்களூர், கோவை, மதுரை,  சேலம். தஞ்சை, சென்னை, கொச்சி,  புதுச்சேரி எனப் பல்வேறு ஊர்களில் இருந்து இலக்கியவாசகர்களும், எழுத்தாளர்களும் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். பவாவின் ஏற்பாடு எப்போதும் ஆகச்சிறந்ததாகவே இருக்கும். இந்த முறை கொண்டாட்டத்தின் உச்சம். பவாவும், அவரது குடும்பமும் நண்பர்களும் இந்நிகழ்வை மறக்கமுடியாத பெரும் அனுபவமாக உருவாக்கினார்கள். காலை பத்து மணிக்குத் துவங்கி இரவு ஒன்பது வரை நிகழ்வுகள்.  வாசகர்கள் பலரும் எனது படைப்புகள் [...]

வாசகசாலை 100

தமிழகம் முழுவதும் புத்தக வாசிப்பினை ஒரு பேரியக்கமாக உருமாற்றி வருகிறது வாசகசாலை. நூலகம் தோறும் அவர்கள் நடத்தி வரும் நிகழ்ச்சிகள் மிகுந்த பாராட்டிற்குரியவை. சிறந்த கவிதைகள், சிறுகதைகள், நாவல், கட்டுரை என பல்வேறு நூல்களை அறிமுகப்படுத்தி இளம்வாசகர்களை படிக்க வைக்கும் அரிய செயலை மேற்கொண்டு வருகிறார்கள்.  இச்செயல்பாடு பண்பாட்டு வளர்ச்சிக்கு மிகுந்த உறுதுணை செய்கிறது என்பதே நிஜம். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற வாசகசாலையில் சிறுகதை கொண்டாட்டம் 100 வது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினேன். இந்நிகழ்வில் [...]

அதிகதைகள் – ஒரு அறிமுகம்

சிங்கப்பூரில் உள்ள இளம் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து அரூ என்ற இணைய இதழைக் கொண்டுவருகிறார்கள். மிகச்சிறப்பான படைப்புகளுடன் இதழ் வெளியாகிறது. மிகைப் புனைவும் (fantasy fiction), அறிவியல் புனைவும்  கொண்ட படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் இணைய இதழது.  புதிய கதைவெளியை உருவாக்க முனையும் அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். அரூ இதழில் வெளியான எனது சிறுகதை தொகுப்பு பற்றிய கட்டுரையிது. நண்பர் கணேஷ் பாபு தேர்ந்த இலக்கிய வாசகர்.  வெயிலைக் கொண்டு வாருங்கள் சிறுகதைத் தொகுப்பு பற்றி [...]

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: