2020 April


Archive for April, 2020

மார்லன் பிராண்டோவும் சாப்ளினும்.

சார்லி சாப்ளின் தனது படங்களில் தானே கதாநாயகனாக நடிப்பதே வழக்கம். ஆனால் அவர் மார்லன் பிராண்டோவை நாயகனாக நடிக்க வைத்து A Countess from Hong Kong என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப்படத்தில் இரண்டே இரண்டு காட்சிகளில் மட்டுமே சாப்ளின் நடித்திருக்கிறார். நேற்றிரவு A Countess from Hong Kong பார்த்தேன். சாப்ளின் முதன்முறையாக வண்ணத்தில் உருவாக்கிய படம். சாப்ளின் இயக்கிய லைம்லைட் படம் வெற்றி பெறவில்லை. அத்தோடு அமெரிக்காவை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் வாழ்ந்த சாப்ளின் [...]

குறுங்கதை 64 ரிங் மாஸ்டர்

சர்க்கஸிலிருந்த அந்தச் சிங்கம் மூன்று வேடிக்கைகளைச் செய்தது. முக்காலியில் ஏறி நின்று இரண்டு கால்களைத் தூக்கி சல்யூட் அடிப்பது. கால்பந்து ஒன்றைக் காலால் உதைத்து விளையாடுவது, நெருப்பு வளையம் ஒன்றில் பாய்ந்து தாவுவது என இந்த மூன்றையும் சிங்கம் செய்யும் போது அரங்கம் அதிரும். பார்வையாளர்கள் கூச்சலிடுவார்கள். கைதட்டுவார்கள். ரிங் மாஸ்டர் பணிவுடன் தலை வணங்கி அந்தப் பாராட்டினை ஏற்றுக் கொள்வான். பின்பு சிங்கத்தின் பிடரியைத் தடவி விட்டு ஒரு வளர்ப்பு நாயைப் போல கூண்டிற்குக் கூட்டிச்செல்வான். [...]

குறுங்கதை 63 கூட்டாஞ்சோறு

அந்த ஊரின் சிறந்த சமையற்காரர்களாக இருந்த எவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதிலும் துரையப்பா, சாமியார் போலச் சாயவேஷ்டி தான் கட்டிக் கொள்வார். சமைக்கிறவன் துறவியாக இருக்க வேண்டும் என்பது போலிருக்கும் அவரது தோற்றம். கல்யாண வீடுகளில் துரையப்பா சமையல் என்றால் தனி விசேசம். எல்லாத் திருமண வீடுகளுக்கும் சமைக்க அவர் ஒத்துக் கொள்வதில்லை. துரையப்பாவை கட்டாயப்படுத்தி எவரும் சமைக்க வைத்துவிட முடியவே முடியாது. அவரது சம்பளம் 1001 ரூபாய். அதில் பாதியைக் கோவிலுக்குக் கொடுத்து விடுவார் [...]

குறுங்கதை 62 சிறியதே அழகு

பிரம்மாண்டமான மலையின் அருகில் அமைந்திருந்தது அந்தப் பௌத்த மடாலயம். அதில் இளந்துறவிகள் நிறைய இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு ஒரு புதுப் பயிற்சி அளிக்கப்பட்டது. அன்றைய நாளின் பயிற்சியாகப் பிக்கு தரசக் எதிரேயுள்ள மலையைச் சிறியதாக்கும்படி கட்டளையிட்டார். இவ்வளவு பெரிய மலையை எப்படிச் சிறியதாக்குவது என இளந்துறவிகளுக்குத் தெரியவில்லை. அவர்கள் மலையின் அருகே சென்று கண்மூடி தியானம் செய்தார்கள். சிலர் மந்திரம் சொன்னால் சிறியதாகிவிடும் என நினைத்து உச்சாடனம் செய்தார்கள். ஒருவராலும் மலையைச் சிறியதாக்க முடியவில்லை. மாலை நேரம் பிக்கு தரசக் அங்கே வந்து [...]

மக்கத்துச் சால்வை

ஈழப்படைப்பாளிகளில் எஸ்.எல்.எம். ஹனீபா முக்கியமானவர். கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஹனீபாவின் சிறுகதைகள் தனித்துவமிக்கவை. இலங்கை சென்ற போது ஓட்டமாவடியில் இருக்கும் அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். அழகான வீடு. நிறையப் பழமரங்கள். கிழக்கிலங்கை படைப்பாளிகள் பலருக்கும் அவர் தான் ஞானத்தந்தை. புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமியின் கதைமரபில் வரக்கூடியவர். அவரது மக்கத்துச் சால்வை முக்கியமான சிறுகதைத் தொகுப்பு தேர்ந்த ஓவியர் போலவே ஹனீபா காட்சிகளைக் கண்முன்னே தீட்டிக் காட்டுகிறார். கதாபாத்திரங்கள் நம் முன்னே நடமாடுகிறார்கள். கிழக்கிலங்கை இஸ்லாமியப் பண்பாட்டை மிகவும் நுட்பமாகக் கதைகளில் [...]

குறுங்கதை 61 பேசாத்துணை

ரோசி டிசோசா என்ற அந்தப் பெண்ணிற்குக் கடைசிவரை துணையாக இருந்தது அந்த நாய் மட்டுமே. அவள் நோயுற்ற தருணங்களில் கூட அந்நாய் படுக்கையின் அருகிலே இருந்தது. சில நேரம் ரோசி இரவில் நோயின் வேதனை தாங்கமுடியாமல் அழுவாள். அப்போது அந்த நாய் அவளது கைகளை நக்கி தனது அன்பைத் தெரிவிக்கும். அவளை மருத்துவமனையில் அனுமதித்த நாட்களில்  நாய் வார்டின் உள்ளே வந்துவிட்டது. மருத்துவமனையினுள் நாயிற்கு அனுமதியில்லை என வெளியே துரத்திவிட்டார்கள். அப்படியும் அந்நாய் மருத்துவமனை வளாகத்தை விட்டுப் [...]

குறுங்கதை 60 பெயர் எழுதப்பட்ட கால்பந்து

அப்பாவின் நினைவாக வீட்டிலிருந்தது அந்தக் கால்பந்து. அதில் விளையாட்டு வீரர்களின் பெயர்கள் யாவும் கையெழுத்திடப்பட்டிருந்தன. மங்கிய அந்த எழுத்துகளைக் கொண்டு ஒன்றிரண்டு பெயர்களை மட்டுமே வாசிக்க முடிந்தது. கால்பந்து விளையாட்டில் அப்பா கோல்கீப்பராக இருந்தார். அப்பா பரிசாகப் பெற்ற சில கோப்பைகள் வீட்டிலிருந்தன. ஆனால் அவர் கால்பந்து விளையாடுவது போல ஒரு புகைப்படம் கூட வீட்டில் இல்லை. எத்தனையோ மேட்ச் விளையாடியிருப்பாரே ஒன்றில் கூடவா புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை. அல்லது அந்தப் புகைப்படங்களைத் தொலைத்துவிட்டார்களா ?. எங்கள் [...]

சிறுவர்களின் கனவு.

Good Morning என்ற ஜப்பானியத் திரைப்படத்தைப் பார்த்தேன். யசுஜிரோ ஓசு இயக்கியது.கூழாங்கற்கள் அளவில் சிறியதென்றாலும் தனித்துவமான அழகு கொண்டவை. ஓசுவின் படங்களும் அப்படியானதே, அவரது பிரதான கதைக்களம் குடும்பம். ஜப்பானியக் குடும்ப உறவின் பல்வேறு தளங்களை விவரிப்பதே அவரது படங்கள். அது போலவே காலமாற்றம் ஜப்பானிய வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புகளையும் அவரது படங்கள் துல்லியமாக ஆவணப்படுத்தியிருக்கிறார். ரயில் பாதைகளும் ரயிலும் யசுஜிரோ ஓசுவிற்கு மிகவும் விருப்பமானவை. அவற்றைக் குறியீடுகள் போலவே பயன்படுத்துகிறார் இப்படத்தில் 1950களில் ஜப்பானிய வாழ்க்கை [...]

குறுங்கதை 59 கானலை அருந்தும் யானை.

பாடிப் பரிசல் பெறுவதற்காக வந்த அவர் மூன்று நாட்களாகக் காத்திருந்தார். கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் என்பது அவரது பெயர் மலைநாட்டில் பௌர்ணமி தோறும் நிலா வட்டம் கூடுவது வழக்கம். ஊர் கிழார் பாணர்களையும் பாடினிகளையும் வரவேற்று கௌரவிப்பார். பரிசல் தந்து அனுப்பி வைப்பார். ஒரு முறை அவர் பாணன் ஒருவனுக்குப் புள்ளிமான் ஒன்றைப் பரிசாக அளித்து அனுப்பினார் என்றார்கள். புள்ளிமானுடன் ஒரு பாணன் நெடுந்தொலைவு நடந்து செல்லும் காட்சி நற்சேந்தனார் மனதில் வந்து போனது. ஊர் கிழாரின் [...]

குறுங்கதை 58 காதல்பறவைகள்.

அன்புமிக்கச் சுனிதா அகர்வால் அவர்களுக்கு, நீங்கள் எனது திருமணப்பரிசாகக் கொடுத்தனுப்பிய இரண்டு காதல் பறவைகளை உங்களிடமே திருப்பி அனுப்பி வைக்கிறேன். இது முறையான செயலில்லை என்ற போதும் இந்தப் பறவைகள் வந்த நாள் முதல் நான் நிம்மதியற்றுப் போய்விட்டேன் என்பதால் இதை நீங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மன்றாடுகிறேன். எனக்கோ, என் மனைவிக்கோ பறவைகள் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்ததே கிடையாது. ஒருமுறை அழகான நாய்க்குட்டி ஒன்றை வீட்டிற்குக் கொண்டுவந்த போது உடனே அதை [...]

Archives
Calendar
April 2020
M T W T F S S
« Mar   May »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
Subscribe

Enter your email address: