2020 May


Archive for May, 2020

சாமானியர்களின் வாழ்க்கை

- மணிகண்டன் ”மழைமான்” – தொகுப்பில் பத்துக் கதைகள் உள்ளன. இக்கதைகள் தனித்துவமான கதை சொல்லும் முறையைக் கொண்டிருக்கின்றன. 1. புலப்படாத பறவை : பணத்திற்கும் பொருளுக்கும் ஆசை கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் இக்கால மனிதக் கூட்டத்தில் அபூர்வமான பறவை ஒன்றைத் தேடி பல மைல்கள் தூரம் 40 ஆண்டுகள் தேடி அலையும் ஒரு பறவையிலாரின் இடைவிடாத பயணங்கள் பற்றியும், அப்பறவையைக் கடைசி வரை பார்க்க முடியாமலே துயரத்துடன் இறந்து போகும் அந்த மாமனிதரைப் பின்பற்றி இன்னொரு நண்பர்கள் [...]

நிமித்தம்- துயரத்தின் துளிகள்

சத்தியமூர்த்தி. அஸ்திரேலியா நிமித்திம். எஸ்.ராவால் தமிழுக்குத் தரப்பட்ட இன்னொரு க்ளாஸிக். இதைப் படிக்கும் போது பல இடங்களில் என்னை நெகிழச் செய்ததது. தேவராஜ்க்கு நாற்பத்தியேழு வயதில் திருமணம் நடக்கிறது. அவருக்குக் காது கேட்காது. தன் திருமணத்தின் முதல் நாள் இரவு, தன் நண்பர்களை எதிர்பார்த்து அறையில் காத்திருக்கிறார். யாருமே வரவில்லை. அந்தத் தனிமையில் தன் கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதுதான் நாவலின் கதை. ஒரு மனிதன் வாழ்வில் எந்த அளவுக்குப் புறக்கணிக்கப் படுகிறான் என்று நாவலில் சொல்லப்படுகிறது. [...]

இடக்கை காட்டும் வெளிச்சம்

-கண்ணன். நீதிக்காக மனிதர்கள் நடத்தும் நெடும்போராட்டத்தை தங்களின் இடக்கை நாவலில் நீங்கள்  சிருஷ்டித்த விதம் அற்புதம் , இந்த மண்ணில் எதோ ஒரு காலத்தில் கதை நிகழ்கிறது என சொல்லமுடியாதபடி இன்றைய எதார்த்தத்திற்கு அவ்வளவு நெருக்கமான இன்னும் சொல்வதானால் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான கேள்விகளை நீதி குறித்த விசாரணையை,நீதிக்கான விளக்கத்தை சாமானியனுக்கு ஒரு விதமும்  ஆள்பவருக்கு வேறுவிதமுமாக  ஆளுக்கொரு நீதி கடைபிடிக்கப்படும் சூட்சமத்தை உங்கள் இடக்கை-யில்  வாசித்துக் கடப்பது எளிதாக இருக்கவில்லை … நீதிக்கு இருக்கும் இருபக்கங்களை [...]

இரவை வாசிப்பவர்கள்

(நடு- இணைய இதழில் வெளியான சிறுகதை) அண்ணாசாலையில் அப்படியொரு புத்தகக் கடை இருக்கிறது என்பதே ஆச்சார்யா சொல்லி தான் ரகுவிற்குத் தெரியும். பலமுறை அந்த இடத்தைக் கடந்து போயிருக்கிறான். சிவப்பு நிற கட்டிடத்தைப் பார்த்தவுடன் ஏதோ அரசாங்க அலுவலகம் என்று நினைத்துக் கொண்டிருந்தான். எத்தனை புதிய கட்டிடமாக இருந்தாலும் அரசு அலுவலகங்கள் ஒன்று போலவே இருக்கின்றன. ஒன்று போலவே செயல்படுகின்றன. “அந்தப் புத்தகக்கடையின் பெயர் நைட்ஸ். இரவு ஒன்பதரை மணிக்குத் தான் திறப்பார்கள். விடியும் வரை கடை [...]

தெலுங்கு மொழிபெயர்ப்பு

எனது சிறுகதை மழையாடல் தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்த்திருப்பவர் ஜி. பாலாஜி

குறுங்கதை 91 காதலில் விழுந்த புலி

காட்டிலிருந்த புலியொன்று நீர் அருந்துவதற்காக வந்த குளத்தில் ஒரு சிவப்புக் கொண்டை மீன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டது. அந்த மீனிற்குத் தன்னைக் கண்டுபயமில்லை என்பது புலிக்கு வியப்பாக இருந்தது. புலி தன்னைக் கவனிப்பதை அறிந்தவுடன் சிவப்புக் கொண்டை மீன் வேண்டுமென்றே வாலசைத்து துள்ளியது. புலிக்கு அது வேடிக்கையாகத் தோன்றியது. “என்னை கண்டு பயமில்லையா“ எனக்கேட்டது புலி “தண்ணீரை விட நீ ஒன்றும் பலசாலியில்லை. நான் தண்ணீரில் பிறந்து வளர்ந்தவள்“ என்றது சிவப்புக் கொண்டை மீன் புலிக்குச் [...]

இலக்கிய உரை

தேசாந்திரி Youtube சேனலில் வெளியாகியுள்ள இலக்கிய உரை ”நவீன மலையாள இலக்கியத்தின் அடையாளம் பஷீர் https://youtu.be/XSZSPY0SNhQ

ஆய்வு

எனது கதைகள், நாவல்கள், பயண நூல், கட்டுரைகள்  பற்றி கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலரும் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். இதுவரை நான்கு பேர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். 20க்கும் மேற்பட்டவர்கள் எம்பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலரே தனது ஆய்வேட்டினை எனக்கு அனுப்பித் தருகிறார்கள்.  மற்றவர்கள் அனுப்புவதில்லை.  ஆய்வாளர்கள் ஒரு பிரதியை எனக்கு அனுப்பினால் உங்கள் ஆய்வில் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வேன். •• எனது சிறுகதைத் தொகுதி பற்றி வெளியாகியுள்ள ஆய்வேடு

உபபாண்டவம் எனும் பிரம்மாண்டம்

- மா. ஹரிஹரன். கோவை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உபபாண்டவம் எனும் நாவலை வாசித்தேன் பொதுவாக மகாபாரதம் கதை என்பது நடந்த நிகழ்ச்சிகளை யாராவது வரிசைக்கிரமமாகக் கூறுவதாக இருக்கும். அதாவது Narrative style என்பதுபோல. இதில் திரு. எஸ்.ரா அவர்கள் ஒரு நாடோடிப் பயணியாக அந்தக் காலகட்டத்திற்குள் பயணித்து, அந்தக் கதைமாந்தர்களுடன் விவாதித்து, அவர்களுடைய மன வோட்டத்தினை அவர்கள் மூலமாகவும், மற்றவர் வாயிலாகவும் கூறுகிறார். கதைக்களம் முன், பின்னாக மாறுகின்றது. மகாபாரதத்தில் பேசப்படாத சாமானிய மக்களிடம் இவர் [...]

தானே உலரும் கண்ணீர்

-கிஷோர் குமார் சமூகத்தின் கடைக்கோடி மனிதர்களையும் , அதிகாரத்தால் அநீதி இழைக்கப்பட்டவர்களையும் பற்றித் தமிழ் இலக்கியம் தொடர்ந்து பேசிக்கொண்டு வந்துள்ளது. இக்கருவை வரலாற்றுக் காலத்தில் வைத்து ஆராய்கிறது ராமகிருஷ்ணனின் இடக்கை நாவல். அத்தோடு மட்டும் இந்நாவலை குறுக்கிக்கொள்ள முடியாதபடி வாசிப்பால் விரித்தெடுக்க வேண்டிய பலதளங்களையும் இந்நாவல் தொட்டு சென்றுள்ளது. முகலாயப் பேரரசரான அவுரங்கசீபின் இறுதி காலத்தில் அனைத்து வரலாற்று நாயகர்களும், மாமன்னர்களும், புரட்சி வீரர்களும் அனுபவிக்கும் அந்தக் கொடுந் தனிமையை அவுரங்கசீபும் அனுபவிக்கிறாரார். இளமையில் மரணத்தைத் துச்சமாக [...]

Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr   Jun »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: