2020 May 3


Archive for May 3rd, 2020

தங்கப் பறவையைத் தேடி

ஹாலிவுட் சினிமாவில் film noir என்ற திரைப்பட வகைக் குற்றவுலகையும் அதைக் கண்டறியும் காவல்துறை மற்றும் புலனாய்வாளர்களையும் முதன்மைப்படுத்தியதாகும். கறுப்பு வெள்ளையில் வெளியான film noir படங்கள் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டவை. இந்தச் சினிமா வகையில் மிகவும் கொண்டாடப்படும் ஒரு படம் The Maltese Falcon. டேஷியல் ஹம்மெட்டின் The Maltese Falcon நாவலை ஜான் ஹுஸ்டன் திரைப்படமாக இயக்கியுள்ளார். இது அவரது முதற்படம். ஹம்ப்ரி போகர்ட் துப்பறியும் நிபுணர் சாம் ஸ்பேடாக நடித்திருக்கிறார். 1941 இல் சான் [...]

மேற்கின் குரல்

தங்களது மேற்கின் குரல் நேற்றிரவு முடித்தேன்.  சிறிய நூல், அனுபவம் பெரியது. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு அனுபவம்.  அதிகமாக அடிக் கோடுகள்  மற்றும் குறிப்புகள் எடுத்து கொண்ட புத்தகம் இது. ஒரு நாள்  தனிமையின் நூறு ஆண்டுகள் தொடங்கி இருந்தேன். தற்செயலாக Gabriel Garcio Marquez   மற்றும் தனிமையின் நூறு ஆண்டுகள் பற்றிய கட்டுரை இந்நூலில் படித்தேன். அதில் இருந்து மேற்கின் குரல் தொடங்கியது. தனிமையின் நூறு ஆண்டுகள் முடித்து தங்களது Marquez கட்டூரை மறுபடியும் படித்தேன். [...]

குறுங்கதை 67 பாஷோவின் தோழி

ஜென் கவிஞர் பாஷோவின் தோழியும், சாமுராய் சுனேரியின் மனைவியும் ஆறு குழந்தைகளின் தாயுமான டென் சுடேஜோ எப்போதாவது தான் கவிதைகள் எழுதுவாள். அதுவும் சமைக்கிற நேரம் தான் அவளுக்குக் கவிதைகள் மனதில் தோன்றும். சமையலறைச் சுவரில் வரையப்பட்டிருந்த கொக்கின் அருகில் சென்று தன் மனதிலிருந்த கவிதையை அவள் மெல்லிய குரலில் பாடுவாள். ஒவியக்கொக்கு தான் அவளது கவிதையின் வாசகன். இறக்கை விரிந்து பறக்கும் வெண்ணிறமான அந்தக் கொக்கு கேட்டால் போதும் என்று டென் சுடேஜோ மகிழ்ச்சி அடைந்தாள். [...]

Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: