2020 May 8


Archive for May 8th, 2020

லேர்மன்தேவ்வின் காதல்.

லேர்மன்தேவ் என்ற ரஷ்ய தொலைக்காட்சிக்காக உருவாக்கபட்ட  திரைப்படத்தைப் பார்த்தேன். மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப்படம். மிகையில் லேர்மன்தேவ்(Mikhail Lermontov) எழுதிய நம் காலத்து நாயகன் (A Hero of Our Time) படித்திருக்கிறீர்களா. ரஷ்ய நாவல்களில் மிகவும் தனித்துவமானது. லேர்மன்தேவ் ரஷ்யாவின் புகழ்பெற்ற கவிஞர். ஒரேயொரு நாவல் தான் எழுதியிருக்கிறார். சில நாடகங்களையும் ஐந்து கவிதை தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். தனது 27வது வயதில் Duel எனப்படும் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார் லேர்மன்தேவ். புஷ்கினை தனது ஆதர்சமாகக் கொண்ட [...]

குறுங்கதை 72 ஆரஞ்சு நிறப்பந்து

கல்கத்தாவிலிருந்து அந்தக் கால்பந்தை வாங்கி வந்திருந்தார் மாமா. கதிருக்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. எப்போது விடியும் எப்போது மைதானத்திற்குக் கொண்டு போய் விளையாடலாம் என இரவெல்லாம் காத்துக் கொண்டிருந்தான். சேலஞ்ச் என்று எழுதப்பட்ட ஆரஞ்சு நிறப் பந்து. அது போன்ற ஒன்று யாரிடமும் கிடையாது. அந்தப் பெருமையோடு அதிகாலையில் மைதானத்தை நோக்கி நடந்து போக ஆரம்பித்தான். காந்தி மைதானம் மிகப்பெரியது. அதன் மேற்கு பக்கம் எப்போதும் பெரிய பையன்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். போட்டிகள் கூட அங்கே நடப்பதுண்டு. [...]

குறுங்கதை 71 வாஸ்கோடகாமாவின் அடிமை.

1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா கோழிக்கோடு துறைமுகத்திற்குக் கப்பலில் வந்திறங்கிய போது அவனுடன் மூர் இனத்தைச் சேர்ந்த சில அடிமைகளும் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் தான் மிலா. உண்மையில் அது அவனது பெயரில்லை. அவனது விசித்திர உருவத்தைக் கண்ட மக்கள் அவனை மிலா என்று அழைத்தார்கள். மன்னரின் விருந்தினராக வாஸ்கோட காமா மூன்று மாதங்கள் தங்கியிருந்த நாட்களில் மிலா சுற்றுப்புறக் கிராமங்களில் அலைந்து திரிந்தான். நீர் நிலைகளும் வானுயர்ந்து நிற்கும் தென்னை மரங்களும் மிளகுகொடிகளும் பசுக்களும் அழகான [...]

Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: