2020 June 2


Archive for June 2nd, 2020

சிறப்புத் திட்டம்.

என் மகன் ஹரிபிரசாத் மற்றும் அவனது நண்பர்கள் இணைந்து DESANTHIRI YOUTUBE CHANNELயை கடந்த ஓராண்டாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். அவர்களுக்குப் பல்வேறு விதங்களில் உதவிய நல்ல உள்ளங்களுக்கு மனம் நிரம்பிய நன்றி. குறிப்பாக ஸ்ருதி டிவி கபிலன் மற்றும் சுரேஷ், புகைப்படக்கலைஞர் இளவேனில், மணிமாறன், அன்பு, சித்துராஜ் பொன்ராஜ், திருவாசகம்,  உள்ளிட்ட நண்பர்களுக்கு அன்பும் நன்றிகளும்.. இந்தச் சேனல் வழியாகப் புதிய நிகழ்ச்சிகளை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறார்கள். குறிப்பாக உலகச் சினிமா குறித்த எனது உரைகள். [...]

குறுங்கதை 94 இப்படியும் ஒரு காதல்

அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகள் கல்வி பயிலுவதற்காக ரகு போயிருந்த நாட்களில் சென்னையிலுள்ள அவனது வீட்டிற்கு ஒரு இளம் பெண் வந்திருக்கிறாள். அவனது அறையிலே தங்கியிருக்கிறாள். அவனது கட்டிலில் படுத்து உறங்கியிருக்கிறாள். புத்தக அடுக்கினைப் புரட்டியிருக்கிறாள். அவனது சிறுவயது புகைப்படங்களை ஆசையாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இதை எல்லாம் அம்மா சொல்லிக் கேட்டபோது ரகுவிற்குக் கூச்சமாக இருந்தது. “ஏன் அந்தப் பெண்ணை அனுமதித்தீர்கள்“ என்று கோவித்துக் கொண்டான் “மோகன் மாமா அழைத்துக் கொண்டு வந்திருந்தார். ஏதோ விளையாட்டுப் போட்டிக்கு [...]

குறுங்கதை 93 தலைமறைவு

பிளேடைப் பாதியாக உடைத்துச் சவரம் செய்யும் பழக்கம் தலைமறைவு காலத்தில் தான் குணாவின் அப்பாவிற்கு ஏற்பட்டது. அரசியல் காரணங்களுக்காகக் அவர் மூன்று ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். அப்போது குணாவிற்கு வயது நான்கு. அப்பா எங்கோ வெளியூர் சென்றிருக்கிறார் என்று தான் வீட்டில் சொல்லியிருந்தார்கள். மணல் தேரிகளுக்குள் இருந்த சிறிய கிராமத்தில் அப்பா அடைக்கலம் புகுந்திருந்தார். அந்த ஊரிலிருந்த நாவிதர் கருப்பையாவின் அண்ணன் என்றே அவரைச் சொல்லி வைத்திருந்தார்கள். தலைமறைவு காலத்தில் அப்பா ஒரு வாளித் தண்ணீரில் குளிக்கப் [...]

Archives
Calendar
June 2020
M T W T F S S
« May   Jul »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: