2020 June 7


Archive for June 7th, 2020

குறுங்கதை 100 கடிகாரத் திருடன்

அந்தப் பிக்பாக்கெட் திருடன் முதன்முறையாகக் காந்தியை ஒரு ரயில் நிலையத்தில் தான் பார்த்தான். ஆயிரக்கணக்கில் மனிதர்கள். ஒரே தள்ளுமுள்ளு. ரயிலை விட்டு காந்தியை இறங்கவிடவில்லை. எங்கிருந்து இவ்வளவு பேர் திரண்டு வந்திருந்தார்கள். எதற்காக இந்த மனிதரை இப்படி வணங்குகிறார்கள் என்று அவனுக்குப் புரியவேயில்லை. ஆனால்  சட்டையில்லாத உடலுடன் அந்தக் கிழவர் புன்சிரிப்புடன் நிற்பதைப் பார்க்கையில் மனதில் ஏதோவொரு ஈர்ப்பு உருவானது. கூட்டத்தோடு சேர்ந்து அவனும் காந்தியைப் பார்த்துக் கையசைத்தான். காந்தி இரண்டு நிமிடங்கள் பிளாட்பாரத்தில் நின்று பேசிவிட்டு [...]

குறுங்கதை 99 முறையீடு

ராயப்பன் அந்த வழக்கைத் தொடர்ந்த போது அவருக்குச் சொந்தமாக ஐந்தரை ஏக்கர் நிலமும் பம்ப்செட் ஒன்றும் இருந்தது. உள்ளூரிலே பேசி முடித்துத் தீர்த்து வைத்திருந்தால் எளிதாக முடிந்து போயிருக்கும். ஆனால் அவர் பக்கம் நியாயம் இருந்த போதும் எவரும் உதவிக்கு வரவில்லை. ராயப்பனுக்கு சொந்தமாக ஊரின் மேற்காக ஒன்றரை ஏக்கர் கரிசல் நிலமிருந்தது. அதைக் குத்தகைக்குக் கேட்பதற்காக அவரது தூரத்து உறவினர் கந்தசாமி வந்த போது ராயப்பன் கொடுப்பதற்குத் தயங்கினார்.  ஆனால் கந்தசாமிக்கு ஆதரவாகத் துளசி வாத்தியார் [...]

Archives
Calendar
June 2020
M T W T F S S
« May   Jul »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: