Day: June 8, 2020

பருத்திப் பெண்டிர்

ஆர். பாலகிருஷ்ணன் IAS சங்க இலக்கியங்கள் குறித்துத் தொடர் உரைகளை இணையம் வழியாக நிகழ்த்தி வருகிறார். அதில் கடந்தவாரம்  பருத்திப் பெண்டிர் என்ற தலைப்பில் மிகச் சிறப்பான உரை ஒன்றை நிகழ்த்தினார். ஆர். பாலகிருஷ்ணன் IAS தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர் என்பதுடன் இந்திய ஆட்சிப்பணியின் மூத்த அதிகாரியாக இருப்பவர் என்பதால் புதிய வெளிச்சத்தில் சங்க இலக்கியங்களை அறிமுகம் செய்கிறார்.  இந்த உரை அவரது அறிவு விசாலத்தின் அடையாளம். தன்னை ஒரு தமிழ் மாணவன் என்று பெருமையோடு …

பருத்திப் பெண்டிர் Read More »

தேசாந்திரி இணையதளம்

தேசாந்திரி பதிப்பகத்தின் இணையதளம் புதிதாக வடிவமைக்கபட்டுள்ளது. ஆன்லைன் மூலம் எனது புத்தகங்களை வாங்க விரும்புகிறவர்கள் இதனைத் தொடர்பு கொள்ளவும் லாக்டவுன் காலச் சலுகையாக அனைத்து நூல்களுக்கும் 20 சதவீத தள்ளுபடி அறிவிக்கபட்டிருக்கிறது. வெளியூர்களுக்கு கூரியர் மூலம் புத்தகம் அனுப்பி தரப்படும். https://www.desanthiri.com/shop/ For More queries contact 044-23644947,+91 8778435129, 9600034659

வானம் காட்டும் உண்மை.

அ.திருவாசகம், அண்ணா நகர், மதுரை. •• சமீபத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் ‘’இந்திய வானம்’’ என்னும் புத்தகம் வாசித்தேன். எஸ். ராமகிருஷ்ணன்  தொடர்ந்து இந்தியாவெங்கும் பயணம் செய்து, அந்தப் பயணங்களின் வழியாக மக்ளின்  வாழ்க்கையின் இனிமைகளையும், அவர்களுக்குள்  உள்ளோடும் அவலங்களின் சாரத்தைப் பற்றியும் பதிவு செய்துள்ளார். அவரது  இந்திய வானம் என்ற நூல் பயணங்களைப் பற்றிச் சொல்லக்கூடியது. நூலைப் படிக்கும் போது, இன்னும் மாறாமல் மூலைமுடுக்குகளில் சிக்கியிருக்கும்  மாறா மனிதர்களின்  பண்பாடு, மொழி, கலாச்சாரம், வாழ்வியலை தேடிச் செல்ல …

வானம் காட்டும் உண்மை. Read More »

யாமம் விமர்சனம்

ஈநாடு என்ற தெலுங்கு நாளேடில் எனது யாமம் மொழிபெயர்ப்பு குறித்த விமர்சனம் வெளியாகியுள்ளது. நாவலை மிகச்சிறப்பாகப் பாராட்டியுள்ளார்கள். மொழிபெயர்ப்பாளர் பாலாஜிக்கு அன்பும் நன்றிகளும்

கதைகேளு கதைகேளு

வித்யா சுபாஷ் அமெரிக்காவில் வசிக்கிறார். ஜீரோ டிகிரி வெளியிட்டுள்ள எனது இடக்கை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை (The Final Solitude ) மிகச்சிறப்பாக திருத்தம் செய்து கொடுத்தவர் வித்யா சுபாஷ். சிறந்த இலக்கிய வாசகர். மொழிபெயர்ப்பாளர். இசையில் மிகுந்த தேர்ச்சி கொண்டவர். அவர்  தனக்குப் பிடித்தமான சிறுகதைகளைத் தன் குரலில் பதிவு செய்து கதைகேளு கதைகேளு என்ற தலைப்பில் You tubeல் வெளியிட்டு வருகிறார். அருமையான குரல். தெளிவான உச்சரிப்பு. நேர்த்தியான கதை சொல்லல். கதையின் உணர்ச்சிகளை …

கதைகேளு கதைகேளு Read More »

தலாய்லாமா உரை

தினசரி காலை ஏழு மணிக்கு தலாய் லாமா இணையத்தின் வழியே உரையாற்றுகிறார். சில நாட்கள் கேள்வி பதில் பகுதியும் இடம்பெறுகிறது. அதைத் தொடர்ச்சியாகக் கேட்டு வருகிறேன். மிகச் சிறப்பான உரைகள். தலாய் லாமாவின் நிதானமும் சிரிப்பும் அபூர்வமானது. நேற்றைய உரையில் சில முக்கியமான விஷயங்களைக் குறிப்பிட்டார் பண்டைய இந்தியாவை நவீன இந்தியா மறந்துவிட்டது. ஆனால் பண்டைய இந்தியாவோ நவீன இந்தியாவை நோக்கி தன் கையை நீட்டிக் கொண்டேயிருக்கிறது. மொழி வழியாக மட்டுமே இன்றும் பண்டைய இந்தியா நம்மோடு …

தலாய்லாமா உரை Read More »