2020 June 10


Archive for June 10th, 2020

பசியின் குரல்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான நட் ஹாம்சனின் Hunger/Sult novel 1890 ல் வெளியானது. வாசகர்களால் கொண்டாடப்பட்ட இந்த நாவலைத் திரைப்படமாகவும் எடுத்திருக்கிறார்கள். இந்நாவலை.க. நா. சு பசி எனத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறியதொரு நாவல். ஆனால் அழுத்தமான அனுபவத்தைத் தரக்கூடியது. இளம் எழுத்தாளனின் ஒரு நாள் காலையில் நாவல் துவங்குகிறது எண்ணவோட்டங்களின் வழியே கதை விவரிக்கப்படுகிறது. கையில் காசில்லாத ஒருவன் ஒரு நாளை எப்படி மதிப்பிடுவான் என்பதைக் கதை அழகாக விவரிக்கிறது. பசி தான் [...]

புகலிடம் தேடி.

ஜான் ஸ்டீன்பெக்கின் Of Mice and Men திரைப்படத்தைப் பார்த்தேன்.. 1937 வெளியான ஸ்டீன்பெக்கின் நாவலை மையமாகக் கொண்ட படமிது. புலம்பெயர்ந்த பண்ணைத் தொழிலாளர் இருவரது வாழ்க்கைக் கதையே இப்படம். கேரி சினிஸ் இப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். படத்தில் துவக்கக் காட்சியில் ஜார்ஜ் மில்டன் மற்றும் லென்னி இருவரும் பண்ணை ஒன்றிலிருந்து தப்பியோடுகிறார்கள். அவர்களைப் பண்ணை உரிமையாளர்கள் துரத்துகிறார்கள். பரபரப்பான அந்தக் காட்சியின் முடிவில் அவர்கள் ரயிலில் தப்பிவிடுகிறார்கள். எதற்காக அவர்கள் தப்பியோடுகிறார்கள் என்பது பின்பகுதியில் தான் [...]

குறுங்கதை 101 அவனது விளையாட்டு

அந்தச் சிறுவனுக்குப் பந்து அல்லது பொம்மைகளை வைத்து விளையாடுவதில் விருப்பமில்லை. அவன் காணும் பொருட்களுக்குப் புதிய பெயர்களை வைத்து விளையாடும் வழக்கம் கொண்டிருந்தான். குறிப்பாக அவன் வீட்டினைக் கடந்து தினமும் வாத்துக்கூட்டம் செல்வதைக் காணுவான். அந்தக் கூட்டத்தில் விடுபட்டது போலத் தனியே இரண்டு வாத்துகள் செல்வது வழக்கம். அந்த வாத்துகளுக்குக் கினா டினா என அவனாக ஒரு புதுப்பெயர் வைத்தான். தன் பெயர் பற்றி எதுவுமறியாத வாத்து எப்போதும் போல மெதுவாக நடந்து போனது. அந்த வாத்துகளுக்கு [...]

குறுங்கதைகள் – இயக்குநர் வசந்தபாலன்

இணையத்தில் நான் எழுதி வரும் குறுங்கதைகள் குறித்து இயக்குநர் வசந்தபாலன் தனது வாசிப்பு அனுபவத்தை சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். அவருக்கு என் மனம் நிரம்பிய நன்றி •• எஸ் ராவின் 100 குறுங்கதைகள் குறித்து வசந்தபாலன் இந்த பெருந்தொற்று காலத்தின் அருமருந்தாக ஜெயமோகன் எழுதிய 69 சிறுகதைகளையும், எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய 100 குறுங்கதைகளையும் கூறுவேன். தமிழ் இலக்கிய உலகில் கிழக்கு மேற்கும் ஆங்காரமாய் எழுந்து நிற்கும் யானைகள் இவர்கள். கொரோனோ பற்றிய செய்திகள் ஈக்களைப் போல [...]

Archives
Calendar
June 2020
M T W T F S S
« May   Jul »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: