2020 June 15


Archive for June 15th, 2020

இடக்கை -ஒரு பார்வை

இடக்கை இருண்டகாலத்தின்  கதை.அதிகாரத்தின் இறைமைக்கும் பேராசைக்கும் தீனியாக்கப்படும்  சாமானியர்களின்  வாழ்க்கையை  சொல்லும் குரூர வரலாற்றின்  கதை.கிட்டத்தட்ட அரசியல் சூதும் -வஞ்சகங்களும்-படுகொலைகளும்- அழித்தொழிப்புக்களும்  நிரம்பிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தினை அதனுடைய தன்மைகெடாமல் வெளிப்படுத்திய நடப்புயுகத்தின் புனைவுப்பிரதியாக இடக்கை நாவலைக் கருதுகிறேன். இந்த நாவல் நெடுக பேரரசுகள் வீழ்ச்சியுறும் ஒலிகள் கேட்டபடியிருக்க,அந்தப் பேரரசுகளால் கொல்லப்பட்ட,நீதிமறுக்கப்பட்ட குரல்கள்  தம்மை அடையாள அழிப்புச்செய்து மவுனித்துக் கொண்டேயிருக்கின்றன.நாவலில் வருகிற தூமகேது,அஜ்ஜா பேகம் ஆகிய இவ்விரு கதாபாத்திரங்களின் மூலமாக நிகழ்த்தப்படும் – விவாதிக்கப்படும் ஒவ்வொரு சம்பவங்களும் வரலாற்றை [...]

உறுபசி

அ.திருவாசகம், எஸ்.ராமகிருஷ்ணனின் ”உறுபசி” நாவல் வாசித்தேன். எந்த மிகை உணர்ச்சியும் இல்லாமல் உண்மையான வார்த்தைகளால் நாவலை பதிவு செய்திருக்கிறார். கல்லூரியில் தமிழ் இளங்கலை படித்த சம்பத் என்ற நண்பனின் மரணத்தில் தொடங்குகிறது நாவல். சம்பத்தான் இந்த நாவலின் மையப்பகுதியாக இருக்கிறான். அரசு மருத்துவமனையில் கிடத்தி வைக்கப்பட்ட சம்பத்தின் சட்டையில் ஒரு சிவப்பு எறும்பு ஊர்ந்து போய் கொண்டிருந்ததையும், அதனை இனி தட்டி விடத் தேவையில்லை என அவன் மனைவி  எண்ணுவது இரக்கத்தை ஏற்படுத்துகிறது. சம்பத்தின்  மரணம், அவனோடு கல்லூரியில் தமிழ் இளங்கலை படித்த  அழகர், ராமதுரை, மாரியப்பன் என்ற மூன்று நண்பர்களை மீண்டும் சந்திக்க வைக்கிறது. அழகர் சிகரெட் பற்ற வைத்த கயிறு கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து கொண்டிருப்பதை எண்ணி மனிதன் வாழ்வும் இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து கொண்டிருக்கிறதோ என அவன் மனதில் மெல்லிய பயம் ஏற்படுகிறது. சம்பத்தின் மனைவி ஜெயந்தி. சம்பத் கல்லூரியில் காதலித்த பெண் யாழினி. ஓவ்வொருவரின் பார்வையின் வழியே சம்பத் என்ற கதாப்பாத்திரம் வாசகனுக்கு சொல்லப்படுகிறது. சம்பத்தின்  மரணத்தின் போது, நீர்மாலை எடுத்து வருவதற்காக தெருவில் உள்ள அடி குழாயில் தண்ணீர் எடுக்க  சம்பத்தின் [...]

Archives
Calendar
June 2020
M T W T F S S
« May   Jul »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: