2020 July


Archive for July, 2020

மூன்று கடல் தாண்டி.

மக்கள் தொலைக்காட்சியில் தினமும் மதியம் மூன்று மணிக்குச் சிறந்த அயல்நாட்டுத் திரைப்படங்களைத் தமிழ் சப்டைட்டிலுடன்  திரையிடுகிறார்கள். புகழ்பெற்ற ரஷ்யத் திரைப்படங்கள் இதில் ஒளிபரப்பாகியுள்ளன. சில படங்கள் பலமுறை திரையிடப்படுகின்றன. அப்படி ஒளிபரப்பான Journey Beyond Three Seas திரைப்படத்தைப் பார்த்தேன். இதே படத்தை முன்பு தூர்தர்ஷன் ஒளிபரப்பு ஒன்றில் பார்த்திருக்கிறேன். இப்படம் 1957 ல் “Pardesi” என்ற பெயரில் இந்தியில் வெளியாகியிருக்கிறது. ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த குதிரை வர்த்தகரான அஃபனாசி நிகிதின் எழுதிய பயணக்குறிப்புகளை மையமாகக் கொண்டு [...]

அஞ்சலி

தமிழ் இலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளியும் அன்புமிக்க நண்பருமான எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களின் மறைவிற்கு இதயப் பூர்வமான அஞ்சலி

குறுங்கதைகளின் வழியே

இந்த ஊரடங்கு காலத்தில் 125 குறுங்கதைகள் எழுதியிருக்கிறேன். குறுங்கதை எழுதுவது பெரிய நாவல் எழுதுவதை விடவும் மிகச் சவாலானது குறுங்கதை எனும் வடிவம் இல்லாத நாடேயில்லை. அதை மிக அதிகமாக மதம் பயன்படுத்தியிருக்கிறது. கதை சொல்லாத ஞானியே இல்லை. நாட்டுப்புறக்கதைகளில் குறுங்கதை வடிவமே பிரதானமாக உள்ளது. எழுத்து மரபு உருவானபிறகு தான் குறுங்கதைகள் நீட்சியடைந்தன. நவீன இலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகள் பலரும் குறுங்கதை வடிவத்தைப் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். மெய் தேடல், தத்துவம் மிகைபுனைவு. மயா யதார்த்தம், கனவுத்தன்மை, [...]

குறுங்கதை 125 கவலைகளின் குளியலறை

அந்த நகரில் கவலைகளின் குளியலறை ஒன்றிருந்தது. அது ஒரு பொதுக்குளியலறை. நாள் முழுவதும் மக்கள் அங்கே குளிக்கக் காத்திருந்தார்கள் உண்மையில் அது ஒரு நீரூற்று. அந்த நீரூற்று பொங்கி வழிந்து தாரையாகச் செல்லும் வழியினைத் தடுத்து பதினாறு குளியலறைகளை உருவாக்கியிருந்தார்கள். ஆண்களுக்கு எட்டு. பெண்களுக்கு எட்டு. கவலைகளின் குளியலறையில் மரத்தால் செய்யப்பட்ட தொட்டி ஒன்றிருந்தது. அந்த தொட்டியினுள் இறங்கிக் குளிக்க வேண்டும். குளித்து வெளியேறும் போது கவலைகள் அத்தனையும் மனதிலிருந்து நீங்கிவிடும். துவைத்த உடையைப் போலப் புதிதாக [...]

குறுங்கதை 124 பெரிய தோசை.

அந்தச் சிறுமிக்கு நான்கு வயதிருக்கும். உணவகத்தில் தன் மேசைக்கு எதிரில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களின் இலையில் உள்ள உணவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். “என்ன சாப்பிடுறே தேவி“ எனக்கேட்டார் அவளது அப்பா “பெரிய தோசை“ என இரண்டு கைகளையும் அகல விரித்துக் காட்டினாள் சிறுமி “உன்னாலே பெரிய தோசையை சாப்பிட முடியாது. இட்லி வாங்கிக்கோ“ என்றாள் அம்மா “இல்லை. நான் வானம் அளவுக்குப் பெரிய தோசைன்னாலும் சாப்பிட்ருவேன்“ என்றாள் சிறுமி அதைக்கேட்டுச் சிரித்தபடியே சர்வர் “அப்போ ஒரு [...]

குறுங்கதை.123 சிறியதொரு கிரகம்.

அந்தக் கிரகத்தை ஒரு புத்தகம் ஆட்சி செய்து வந்தது. அதை எழுதியவர் யார் என்றோ. எப்படி அந்தப் புத்தகம் ஆட்சிக்கு வந்தது என்றோ யாராலும் கண்டறிய முடியவில்லை. ஆனால் அந்தப் புத்தகத்தின் சொற்கள் பல்வேறு ரூபங்களில் அக் கிரகத்தினை நிர்வகிக்கத் துவங்கின. புத்தகத்தை மீறி யாராலும் நடந்து கொள்ள முடியாது. மீறுபவர்களுக்கான தண்டனைகளையும் புத்தகமே முடிவு செய்தது. அந்தப் புத்தகத்தின் ஒரே பலவீனம். அது பாராட்டிற்கு ஏங்கியது. எவ்வளவு பாராட்டிலும் போதாது என ஆசைப்பட்டது. புத்தகத்தைப் புகழ்ந்து [...]

குறுங்கதை 122 இரண்டு கோமாளிகள்.

இரண்டு சர்க்கஸ் நிறுவனங்களுக்குள் போட்டி இருந்தது. இதில் ஜாய் சர்க்கஸில் வேலை செய்த ரிங்கோ என்ற கோமாளியின் வேடிக்கைகளைக் காண்பதற்காக மக்கள் திரண்டு வந்தார்கள். ரோமன் சர்க்கஸில் வேலை செய்த கோமாளி தனாவிற்கு ரிங்கோவை விடத் தான் சிறந்தவன் எனக் காட்ட வேண்டும் என ஆசையிருந்தது. இதற்காக ஒவ்வொரு ஷோவிலும் புதிய வேடிக்கைகளை உருவாக்கிக் கொண்டிருந்தான். தன்னை விடத் திறமையற்றவனாக இருந்த போதும் எப்படி ரிங்கோ ஜெயிக்கிறான் எனத் தனாவிற்குப் புரியவேயில்லை. தன்னை ரிங்கோ சிரிக்க வைத்துவிட்டால் [...]

குறுங்கதை 121 புத்தனின் நினைவு

நீண்ட காலத்தின் பிறகு கபிலவஸ்து திரும்பும் புத்தரை வரவேற்க நகரே விழாக் கோலம் பூண்டிருந்தது. அரண்மனையில் யசோதா காத்துக் கொண்டிருந்தாள். தந்தையின் முகம் காண ராகுலனும் ஆசையுடனிருந்தான். ஞானம் பெற்ற புத்தருக்குக் கடந்த காலத்தின் நினைவுகளிருக்காது. அவரை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றார்கள். இயற்கைக்கு மட்டும் தான் கடந்த கால நினைவுகள் கிடையாது. கௌதம புத்தர் தனது சீடர்களுடன் வருகை புரிந்தார். மக்கள் மலர் தூவி வரவேற்பு செய்தார்கள். வணிகர்கள் பொற்குவியல்களை அவரது காலடியில் கொட்டினார்கள். [...]

குறுங்கதை 120 இரட்டையர்கள்

இரட்டை குழந்தைகளின் தோற்றம் ஒன்றாக இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால் இரட்டையர்கள் இருவரும் ஒரே புத்தகத்தைத் தான் வாசிப்பார்கள் என்பதோ, இருவரும் ஒன்று போலத் தான் எழுதுவார்கள் என்பதும் வியப்பான செய்தியாகவே இருந்தது. அப்படியான இரட்டையர்கள் இருவர் காசியாபாத்தில் இருந்தார்கள். அவர்களின் தந்தை பீங்கான் பாத்திரங்கள் செய்கிறவராக இருந்தார். இரட்டையர்கள் பள்ளியில் சேர்ந்த நாட்களில் தான் இந்த வியப்பான விஷயத்தை ஆசிரியர்கள் கண்டறிந்தார்கள். இருவரும் ஒன்று போலவே படித்தார்கள். ஒன்று போலவே பரீட்சைக்கு விடை எழுதினார்கள். [...]

குரங்கின் ஒலி.

சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் Eeb Allay Ooo. இணைய ஒளிபரப்பின் வழியாக We Are One Global Film Festival on YouTube விழாவில் இந்தப் படத்தைப்  பார்த்தேன். மும்பை திரைப்படவிழாவின் சிறந்த படத்திற்கான விருது பெற்றிருக்கிறது. Prateek Vat இயக்கியுள்ளார். புது தில்லியின் முக்கியப் பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளால் ஏற்படும் தொல்லையைப் போக்க குரங்கு விரட்டுபவர்களை அரசாங்கமே நியமிக்கிறது. குரங்குகளை விரட்டப் பயன்படுத்தும் விசித்திரமான ஒலியே  ஈப் அலே ஓ. இந்த ஒலியைக் [...]

Categories
Archives
Calendar
July 2020
M T W T F S S
« Jun   Aug »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: