2020 July 14


Archive for July 14th, 2020

டர்னரின் கடற்காட்சிகள்.

Mr Turner  என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். பிரிட்டீஷ் ஒவியரான வில்லியம் டர்னர் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட படமிது. 2014ல் வெளியான திரைப்படத்தை Mike Leigh  இயக்கியிருக்கிறார். இப்படம் டர்னரின் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை மட்டுமே முதன்மைப்படுத்துகிறது. குறிப்பாக அவரது கடைசி நாட்களை. டர்னரின் நிலக்காட்சி ஒவியங்கள் தனித்துவமானவை. குறிப்பாக கடல் சார்ந்த ஒவியங்கள் அவரது முத்திரை ஒவியங்களாகக் கருதப்படுகின்றன.  The Slave Ship  என்ற ஒவியத்தில் தான் எத்தனை நுட்பமான சித்தரிப்புகள்.  கடலின் சீற்றமும் [...]

நேர்காணல்.

மின்னம்பலம் இணைய இதழில் வெளியான நேர்காணல். •• மழைக்காலங்களின் காலை நேரங்கள் அலாதியானவை. அந்தக் கதகதப்பையும் விநோத மனநிலையையும் தனக்குள் பொதித்து வைத்திருப்பவை எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள். விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், 80களில் தனது எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர். இவரது முதல் கதை ‘பழைய தண்டவாளம்’ கணையாழியில் வெளியானது. அதைத் தொடர்ந்து, தீவிரமாக எழுதத் தொடங்கிய இவர், புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், பயணம், உலக சினிமா குறித்த அறிமுகம், திரைக்கதை [...]

பிரெஞ்சில்

நீரிலும் நடக்கலாம் என்ற எனது சிறுகதை பிரெஞ்சு மொழியில் வெளியாகியுள்ளது. வசுமதி பத்ரிநாத் மொழியாக்கம் செய்திருக்கிறார். கொரனா காலத்தின் நெருக்கடியை உணர்த்துவது போல சர்வதேச எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தேர்வு செய்து கொண்டு வந்திருக்கிறார்கள். அதில் இந்தக் கதையும் இடம்பெற்றுள்ளது. சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ள வசுமதி பத்ரிநாத் அவர்களுக்கு மனம் நிரம்பிய நன்றி ••

குறுங்கதை 109 பொம்மைக் கல்யாணம்

மொட்டை மாடியில் சிறுவர்கள் ஒன்று சேர்ந்து பொம்மைக் கல்யாணம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளையாக இருந்த பொம்மையை ஒரு சிறுவன் தனது வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்தான். அது ஒரு சூப்பர்மேன் பொம்மை. மணமகளாக மரப்பாச்சியைக் கொண்டு வந்தவள் வேறு ஒரு சிறுமி. மணமகளை அலங்கரிக்கிறோம் என இரண்டு சிறுமிகள் பிளாஸ்டிக் பூக்களை அதன் தலையில் சொருகினார்கள். மணமகனுக்குக் குதிரை வேண்டும் என ஒரு சிறுவன் தேடி அலைந்து தெருமுனையிலிருந்த ஒரு சிறுவன் வைத்திருந்த பிளாஸ்டிக் குதிரை ஒன்றை [...]

பாலைவனப் பள்ளி.

Khomreh (The Jar) என்ற ஈரானியத் திரைப்படத்தை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு திரைப்படவிழாவில் பார்த்தேன். மிகச்சிறந்த படமது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்படத்தை நேற்றிரவு இணையத்தில் பார்த்தேன். இந்த 25 ஆண்டுகளுக்குள் சினிமா எவ்வளவோ மாறியிருக்கிறது. அதன் தொழில்நுட்பமும் கதை சொல்லும் முறையும்  வளர்ந்திருக்கிறது. ஆனால் நேரடியாக, எளிமையாக, வாழ்வின் நிதர்சனத்தை சொல்லும் ஒரு படம் எத்தனை காலம் கடந்தாலும் அதன் வசீகரத்தை இழப்பதில்லை என்பதற்கு Khomreh ஒரு உதாரணம் ஈரானிய சினிமாவின் முன்னோடிப் படமாக [...]

Archives
Calendar
July 2020
M T W T F S S
« Jun   Aug »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: