2020 August 4


Archive for August 4th, 2020

மக்களாட்சியின் குரல்

1970ல் வெளியான Cromwell என்ற வரலாற்றுப்படத்தைப் பார்த்தேன் கென் ஹியூஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். கிராம்வெலாக நடித்திருப்பவர் ரிச்சர்ட் ஹாரிஸ். மன்னர் சார்லஸாக நடித்திருப்பவர் அலெக் கின்னஸ், இங்கிலாந்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது நாடாளுமன்ற படைகளுக்குத் தலைமை தாங்கிப் போரிட்டு வெற்றி தேடித் தந்தவர் ஆலிவர் கிராம்வெல் இங்கிலாந்தின் மன்னராட்சி முறையை மாற்றி மக்களாட்சி முறையை அமைப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை விவரிக்கும் விதமாகக் கிராம்வெல் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது, பிரிட்டீஷ் வரலாற்றுபடங்கள் [...]

ரிவேரா

மெக்சிகோவின் தலைசிறந்த ஓவியர் டீகோ ரிவேரா. டெட்ராயிட் நகரிலுள்ள ம்யூசியத்தில் ரிவேரா வரைந்த மிகப்பெரிய சுவரோவியத்தைக் கண்டிருக்கிறேன். மறக்க முடியாத ஓவியமது, அவரது வாழ்க்கையையும் ஓவியங்களையும் புரிந்து கொள்வதற்கு எளிய அறிமுக நூலாக உள்ளது ஜேநெட் மற்றும் ஜோனாஹ்வின்ட்டர் எழுதிய டீகோ ரிவேரா. நிவேதா இதைத் தமிழாக்கம் செய்திருக்கிறார். இரட்டைபிள்ளைகளில்  ஒருவராகப் பிறந்த ரிவேரா தனது சகோதரன் நோயினால் இறந்துவிடவே   அந்தோனியா என்ற பூர்வகுடி இந்தியப் பெண் பொறுப்பில் மலைகிராமத்தில் வளர்க்கபடுகிறார். அந்த வாழ்க்கை அவருக்குள் எப்படி [...]

ஞானக்கூத்தன்

கவிஞர் ஞானக்கூத்தனின் அபூர்வமான  புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் இன்று பார்த்தேன். சில நாட்களுக்கு முன்பு கவிஞர் தேவதச்சனோடு பேசிக் கொண்டிருக்கையில் ஞானக்கூத்தனின் மறைவை தன்னால் இன்னமும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிக் கொண்டிருந்தார். ஞானக்கூத்தனின் புன்னகை வசீகரமானது.  பெரும்பான்மை புகைப்படங்களில் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் அவரது இளமையின் புன்னகையை அடையாளப்படுத்துகிறது. நன்றி https://www.gnanakoothan.com/

இனவரைவியலாளர்

ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ் தமிழில் : ஷங்கர்ராமசுப்ரமணியன் அது டெக்சாசில் நடந்ததாக எனக்குச் சொல்லப்பட்டது. ஆனால் இன்னொரு மாநிலத்தில் நடந்த சம்பவம் அது. அந்தச்சம்பவத்தில் ஒரேயொரு முதன்மைப் பாத்திரம்தான் (ஒவ்வொரு கதையிலும் ஆயிரக்கணக்கான முதன்மைப் பாத்திரங்கள், தெரிந்தும் தெரியாமலும் உயிருடனும் இறந்தும் இருக்கத்தானே செய்கிறார்கள்). அந்த மனிதனின் பெயர், ப்ரெட் முர்டாக் என்று கருதுகிறேன். அவன் அமெரிக்கர்களைப் போலவே உயரமானவன்; அவனது முடி பொன்னிறமும் அல்ல, கருப்பும் அல்ல, அவனது தோற்றம் கூர்மையானது, அவன் மிகவும் குறைவாகவே [...]

வாழ்த்துகள்

சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் One Story Project-இன் ஒரு பகுதியாக எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜின் தர்மரதம் கதை தேர்வு செய்யப்பட்டு மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள் சித்துராஜ் பொன்ராஜின் கதைகள் புதிய கதைமொழியில் நாம் அறியாத உலகை அடையாளம் காட்டுகின்றன.  மிகத் தீவிரமான வாசகர். உலக இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர்.  சிங்கப்பூரின் வரலாற்றையும் சமகாலத்தையும் புதிய வெளிச்சத்தில் எழுதும் அவரது படைப்புகள் அங்கீகாரம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது ••

Archives
Calendar
August 2020
M T W T F S S
« Jul   Sep »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: