2020 August 5


Archive for August 5th, 2020

பந்தயக்குதிரை

ஃபிராங் காப்ரா இயக்கிய ஸ்டேட் ஆஃப் தி யூனியன் என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். 1948ல் வெளியானது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட முயற்சிக்கும் ஒரு மனிதனின் விருப்பம் மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்களின் சூழ்ச்சிகள் பற்றிய நாடகமே படத்தின் கதை 1948 ல் கே தோர்ன்டைக் என்ற இளம்பெண் தனது தந்தையைச் சந்தித்து உரையாடுவதில் படம் துவங்குகிறது குடியரசு கட்சியின் பத்திரிக்கை அதிபரான கே தோர்ன்டைக் எவ்வாறு தனது காதலரான கிராண்ட் மேத்யூவை அமெரிக்க அதிபர் தேர்தலில் [...]

நெரூதா

நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெரூதா குறித்து சிறார்களுக்கான அறிமுகநூலை எழுதியிருக்கிறார் மோனிகா பிரௌன். அழகான வண்ணப்படங்களுடன் வெளியாகியுள்ளது. சிறார்களுக்காக எழுதப்பட்டபோதும் மிகுந்த கவித்துவமான சொற்களால் எழுதியிருக்கிறார் மோனிகா நெரூதாவின் உண்மைப்பெயர் NEFTALÍ RICARDO REYES BASOALTO 1904 ஆண்டு, ஜூலை 12 தேதி சிலி நாட்டில் உள்ள பாரல் என்ற ஊரில் பாப்லோ நெரூதா  பிறந்தார். இவர் பிறந்த சில நாட்களிலேயே அம்மா இறந்துவிடவே தந்தை, டோனா  ட்ரினிடாட் கார்டியா மார்வாடி என்பவரை மறுமணம்‌ [...]

காந்தியின் நிழலில் -2 லூயி ஃபிஷரும் காந்தியும்

காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் சத்திய சோதனையைத் தான் முதலில் வாசிப்பார்கள். காந்தியின் வாழ்க்கையைப் பற்றி வின்சென்ட் ஷீன் எனும் அமெரிக்கப் பத்திரிக்கையாளர் எழுதிய புத்தகம், பிரஞ்சு எழுத்தாளர் ரோமன் ரோலந்த் எழுதிய காந்தி குறித்த புத்தகம் இரண்டும் முக்கியமானது. இதை ஜெயகாந்தன் வாழ்விக்க வந்த காந்தி என மொழியாக்கம் செய்திருக்கிறார், தற்போது ராமச்சந்திர குகா காந்தியின் வாழ்க்கையை மிக விரிவான இரண்டு பகுதி கொண்ட நூலாக எழுதியிருக்கிறார். லூயி ஃபிஷர் எழுதிய காந்தி [...]

Archives
Calendar
August 2020
M T W T F S S
« Jul   Sep »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: