ஜி.சௌந்தர்

யோகா மாஸ்டர் ஜி.சௌந்தரிடம் இரண்டு மாதங்களாக யோகா கற்றுக் கொண்டேன். உடலையும் மனதையும் பேணுவதற்கு யோகா மிகச்சிறந்த வழி.

யோகா கற்றுக் கொள்வதில் நல்ல ஆசான் கிடைப்பது முக்கியம். சௌந்தர் மிகச்சிறந்த ஆசிரியர். . சிறந்த யோக பரம்பரையில் ஒன்றான பிஹார் யோக பள்ளியில் ஏழு ஆண்டுகள் பயின்றவர். சென்னை வடபழனியில் சத்யானந்த யோகமையம் நடத்தி வருகிறார். இவர் கற்றுத்தரும் மரபார்ந்த, முறையான யோகப் பயிற்சிகள் மிகச்சிறப்பானவை. அதன் பலனை நான் முழுமையாக உணர்ந்திருக்கிறேன்.

இலக்கியத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர், நண்பர் ஜெயமோகனுடன் நெருக்கமான நட்பு கொண்டிருக்கிறார். வணிக நோக்கமின்றி,  யோகமரபை முன்னெடுத்துச் செல்வதற்காகவே இந்த யோகமையத்தை நடத்தி வருகிறார். அவரது அர்ப்பணிப்பு  மிக்க பணிக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்.

இவரது யோகப்பயிற்சிகள் மூலம் உடலையும் மனதையும் சிறப்பாக மேம்படுத்திக் கொள்ள முடியும். தற்போது ஆன்லைன் வகுப்புகளை தொடர்ச்சியாக நடத்திவருகிறார்.

விருப்பமுள்ள நண்பர்கள் இவரைத் தொடர்பு கொள்ளவும்

இடம்: Sathyam Traditional  Yoga -Chennai

11/15, South Perumal Koil Lane

Near Murugan temple

Vadapalani       – Chennai- 26

Ph 9952965505

Archives
Calendar
August 2020
M T W T F S S
« Jul    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: