நிமித்தம்- துயரத்தின் துளிகள்


சத்தியமூர்த்தி. அஸ்திரேலியா

நிமித்திம். எஸ்.ராவால் தமிழுக்குத் தரப்பட்ட இன்னொரு க்ளாஸிக். இதைப் படிக்கும் போது பல இடங்களில் என்னை நெகிழச் செய்ததது.

தேவராஜ்க்கு நாற்பத்தியேழு வயதில் திருமணம் நடக்கிறது. அவருக்குக் காது கேட்காது. தன் திருமணத்தின் முதல் நாள் இரவு, தன் நண்பர்களை எதிர்பார்த்து அறையில் காத்திருக்கிறார். யாருமே வரவில்லை. அந்தத் தனிமையில் தன் கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதுதான் நாவலின் கதை. ஒரு மனிதன் வாழ்வில் எந்த அளவுக்குப் புறக்கணிக்கப் படுகிறான் என்று நாவலில் சொல்லப்படுகிறது. தேவராஜ்க்கு காது கேட்காததினால் தான் அவன் புறக்கணிக்கப் படுகிறான் என்பதில்லை. அது ஒரு காரணம் அவ்வளவுதான். இது நம் எல்லோரு வாழ்க்கையிலும் நடக்கும் கதைதான்.

ஒரு அத்தியாயத்திலும் தேவராஜ்க்கு ஒரு புது வேலைப் பார்க்கிறார். அங்கு அவர் சந்திக்கும் அவமானங்கள்; இப்படியே நாவல் நகர்கிறது. சில அத்தியங்களில் கதைக்குள் கதையாக மாய எதார்த்தம் வருகிறது. அது நம்மை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. நாவலின் எல்லாப் பக்கங்களும் என்னை நெகிழச் செய்ததது. இதில் குறிப்பாக இரண்டு அத்தியாங்களைச் சொல்ல வேண்டும் . ஒன்று ”வலியின் நினைவுகள்” இதில் ராஜாமணி என்பவர் ஹோட்டல் நடத்துகிறார். அதில் நரிக்குறவர்களுக்குச் சாப்பாடு இலவசம். இந்தக் கதை நமக்கு ஜெயமோகனின் ”சோற்றுக்கணக்கு” சிறுகதையை ஞாபகப் படுத்துகிறது. ஆனால், ராஜாமணி கடைசியாகக் கொலைச் செய்யப்படுகிறார். ஏன் என்பது நாவலில் சுவாரசியமாகச் சொல்லப்பட்டுயுள்ளது.

”இன்னொரு அவமானம்” என்ற அத்தியாத்தை படித்துவிட்டு நாவலை சிறிது நேரம் மூடிவைத்துவிட்டேன். மிகவும் நெகிழ்ச்சி அடைந்த தருணம். இது போல் ஒரு பையனை என் வாழ்வில் நான் பார்த்திருக்கிறேன். ”காசியில் மணிகள் ஒலிக்கின்றன” என்ற பகுதி கவித்துவத்தின் உச்சம். நிமித்திம் நாவலில் பிரச்சாரம் ஒரு துளிக்கூடக் கிடையாது. இப்போது எல்லாம் முதல் நாவல் எழுதுபவர்கள் கூட நாவலில் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, தான் என்னென்ன சொல்ல நினைக்கிறாரோ அதை அந்தக் காதாப்பாத்திரத்தை மூலம் சொல்ல வைப்பார்கள். அதுவும் போதனை தொனியில். நிமிதத்தில் தொடக்கம் முதல் முடிவுவரை கறாரான யதார்த்ம் நாவலை எந்தச் சலிப்பும் இல்லாமல் படிக்க வைக்கிறது. அபாரமான பொதுப் புத்தி நாவலில் வந்து கொண்டே இருக்கிறது.

இந்த நாவல் பல வாசகர்களுக்குச் சென்று அடைய வேண்டும். இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்ப்பட்டால் கண்டிப்பாகச் சர்வதேச கவனம் பெரும் என்பது என் கணிப்பு.

•••

Archives
Calendar
July 2020
M T W T F S S
« Jun    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: