சிறப்புத் திட்டம்.

என் மகன் ஹரிபிரசாத் மற்றும் அவனது நண்பர்கள் இணைந்து DESANTHIRI YOUTUBE CHANNELயை கடந்த ஓராண்டாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். அவர்களுக்குப் பல்வேறு விதங்களில் உதவிய நல்ல உள்ளங்களுக்கு மனம் நிரம்பிய நன்றி.

குறிப்பாக ஸ்ருதி டிவி கபிலன் மற்றும் சுரேஷ், புகைப்படக்கலைஞர் இளவேனில், மணிமாறன், அன்பு, சித்துராஜ் பொன்ராஜ், திருவாசகம்,  உள்ளிட்ட நண்பர்களுக்கு அன்பும் நன்றிகளும்..

இந்தச் சேனல் வழியாகப் புதிய நிகழ்ச்சிகளை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறார்கள். குறிப்பாக உலகச் சினிமா குறித்த எனது உரைகள். பயணத் தொடர்கள். மற்றும் சமகால உலக இலக்கியம் குறித்த அறிமுக உரைகள். வரலாற்றுத் தொடர்களை உருவாக்க முயன்று வருகிறார்கள்.

இந்த உரைகளைக் கட்டணம் செலுத்திக் காணும்படியாக உறுப்பினர் திட்டம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் இது போன்ற மெம்பர்ஷிப் மூலம் நடத்தப்படும் யூடியூப் சேனல்கள் நிறைய உள்ளன. தமிழில் இது ஒரு முதல் முயற்சி.

இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்வதன் மூலம் பிரத்யேக நிகழ்ச்சிகளைக் காண முடியும். கூடுதலாகத் தேசாந்திரி பதிப்பகத்தில் எனது நூல்களை வாங்குவதற்குச் சிறப்புக் கழிவுகளும் தரப்படும். சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் போது இலவசமாக அதில் கலந்து கொள்ளலாம்

இனி தேசாந்திரி யூடியூப் சேனலை அனைவரும் காண இயலாதா ?

இல்லை. எப்போதும் போல DESANTHIRI YOUTUBE CHANNELயை எல்லோரும் காணமுடியும். ஆனால் சிறப்பு வீடியோக்களைக் காணுவதற்கு உறுப்பினர் ஆவது அவசியம்.

ஏன் உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டும் ?

ஒரு நிகழ்ச்சியைத் தயாரிப்பதற்குக் குறைந்த பட்சம் பத்தாயிரம் வரை செலவு ஆகிறது. அதை யாராவது ஸ்பான்சர் செய்தால் கட்டணமே இல்லாமல் இலவசமாக வெளியிட முடியும். நான் ஆண்டிற்குப் பத்து முதல் இருபது உரையாற்றுகிறேன். அத்தனையும் இலவசம்.  குறைந்த பட்சம் நான் வாங்கும் புத்தகங்களுக்கான பணம் கூட அதிலிருந்து கிடைக்காது.  அந்தக் காணொளிகளை  ஒரு லட்சம் பேர் வரை காணுகிறார்கள். ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுப்பார்கள் என்றால் கூட ஒரு லட்சம் பணம் கிடைத்துவிடும். ஆனால்  அது சாத்தியமில்லாத சூழலில் இது போன்று விருப்பமானவர்கள் உதவி மூலம் நிகழ்ச்சிகளை உருவாக்கத் திட்டமிடுகிறோம்.

உறுப்பினராக இணைவதற்கான இணைப்பு
desanthiri membership link
https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg/join

சிறப்புத் திட்டம் பற்றி அறிந்து கொள்ள.

desanthiiri membership announcement video link
https://youtu.be/0CuatZ0dQYM

••

Archives
Calendar
July 2020
M T W T F S S
« Jun    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: