இந்தவாரக் குறும்படம்

கடலும் கிழவனும்

ஹெமிங்வேயின் புகழ்பெற்ற கடலும் கிழவனும் நாவல் மிகச்சிறப்பாக அனிமேஷனில் உருவாக்கப்பட்டிருக்கிறது, இதனை உருவாக்க அலெக்சாண்டியர் பெத்ரோவ் என்ற ஒவியரும் அவரும் மகனும் இரண்டு ஆண்டுகாலம் எடுத்துக் கொண்டார்கள், 29000 சித்திரங்களை கையாலே கண்ணாடியில் வரைந்து உருவாக்கியிருக்கிறார்கள், இப்படம் சிறந்த அனிமேஷன் படத்திற்காக அகாதமி விருது பெற்றிருக்கிறது

https://video.google.com/videoplay?docid=-6079824527240248060&hl=en#

கவிஞனின் ரத்தம்

1930ம் ஆண்டு பிரபல பிரெஞ்சுக் கவிஞரும் ஒவியருமான ழான் காக்தூ இயக்கிய The Blood of a Poet  என்ற திரைப்படம் வெளியானது, இதை சர்ரியலிச சினிமாவின் முக்கியப் படமாக குறிப்பிடுகிறார்கள், அந்தப்படத்தின் இணைப்பு இது, கனவுகள் போல காட்சிகள் உருவாக்கபட்டுள்ள விதம் பிரமிப்பு ஊட்டுகிறது

https://www.youtube.com/watch?v=BAqxEq4ylb4

நிலமெங்கும் பூக்கள்

சம்ஸ்ரா திரைப்படத்தின் மூலம் பிரபலமான Pan Nalin. இயக்கிய valley of flowers திரைப்படத்தின் இணைப்பு,  மிலின் சோமன் முக்கிய பாத்திரமாக நடித்திருக்கிறார்

https://www.youtube.com/watch?v=9rlB5BRAHfM

சிசிலியா

Cecelia-The Balcony Girl  என்ற இந்த அனிமேஷன் படம் மிகவும் வேடிக்கையானது,

https://www.youtube.com/watch?v=JhKQz2TwSAE

**

0Shares
0