முத்துகிருஷ்ணனின் பயணம்

அ.முத்து கிருஷ்ணன் தமிழில் எழுதி வரும் இளம் படைப்பாளிகளில் முக்கியமானவர். சமூகம், சுற்றுப்புறச்சுழல், மனித உரிமைகள், விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், உலகமயம் என பல்வேறு தளங்களில் எழுதிவருகிறார்.
நீயா நானா, புதுப் புது அர்த்தங்கள் என பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து காத்திரமானவிவாதங்களை மேற்கொண்டு வருபவர். எழுத்தாளராக மட்டுமின்றி ஒரு தீவிரமான சமூக செயல்பாட்டாளராக தொடர்ந்து தனது கள ஆய்வுகளுக்காக இந்தியாவெங்கும் சுற்றிவருபவர்.
கடந்த ஆண்டு இவர் புதுதில்லியில் இருந்து தரை வழியாக 10 ஆயிரம் கிலோ மிட்டர் பயணித்து பாலஸ்தினம் சென்றார், அங்கிருக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கச் சென்ற சர்வதேச அமைதிக்கு குழுவில் இடம் பெற்ற ஒரே தமிழர் முத்துக்கிருஷ்ணன்.
இந்த ஆண்டும் அதே குழுவினருடன் அவர் ஜெருசலம் நோக்கிய ஓரு உலக நடையில் பங்கேற்க இருருக்கிறார். மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் அந்தப் பயணம் 8 நாடுகளின் வழியாக ஜோர்டன் தலைநகரம் அம்மான் சென்று அங்கிருந்து மார்ச் 30 ஆம் தேதி ஜெருசலத்திற்கு செல்லவிருக்கிறது. முழு நேர எழுத்தாளரான அவருக்கு இந்தப் பயணத்திற்கு நிதி அளிக்க விருப்பம் உள்ளவர்கள் முன்வரலாம்
நிதி அளிப்பது தொடர்பான தகவல்களுக்கு -
A.MUTHUKRISHNAN +919443477353 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
A.MUTHUKRISHNAN State Bank of India SB A/C no 30322814376 வங்கி கணக்கில் செலுத்தலாம். Branch – Madurai Kamaraj University Branch, IIFSC Code – SBIN0002235.
Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: