குழந்தைகளுக்கான புத்தகங்கள்

பெற்றோர்களும் குழந்தைகளும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் எவை, யார் வெளியிட்டிருக்கிறார்கள் என்று கேட்டு பலமுறை எனக்கு நண்பர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள்

அந்த எண்ணத்தை மனதில் கொண்டு குழந்தைகள் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகங்களை அறிமுகப்படுத்தி  2013 ஜனவரி 1 முதல் 15 வரை சுட்டிவிகடன் சார்பில் சுட்டித்தமிழ் தொலைபேசியில் பேச இருக்கிறேன்,

044 66802905 என்ற எண்ணிற்கு நீங்கள் போன் செய்தால் நான் சிபாரிசு செய்யும் புத்தகத்தினைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்,

இது ஒரு பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி, தினமும் ஒரு புத்தகம் பற்றி பேச இருக்கிறேன்

இந்தப் புத்தகங்கள் யாவும் சென்னையில் நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில் கிடைக்க கூடியவை,

குழந்தைகள் நலனில் அக்கறையுள்ள பெற்றோர்களுக்கும், கற்பனையையும், அறிவுத்திறனையும் வளர்த்துக் கொள்ள விரும்பும் குழந்தைகளுக்கும் இந்தத் தொலைபேசி உரையாடல் பயனுள்ளதாக இருக்க கூடும்

••

•••

0Shares
0