பிரெஞ்சு படத்தில்

பிரபல பிரெஞ்சு இயக்குனரான Michel Spinosa வின் இயக்கத்தில் உருவான Son épouse ( “His wife”) என்ற பிரெஞ்சு திரைப்படத்தில் நான் பணியாற்றி உள்ளேன்,
இப்படத்தின் ஒரு பகுதி இந்தியாவில் படமாக்கபட்டுள்ளது, இந்தப் பகுதியின் திரைக்கதை உரையாடலை நான் எழுதியிருக்கிறேன்,
மிஷேல் ஸ்பினோசா நான்கு முக்கிய பிரெஞ்சுத் திரைப்படங்களை உருவாக்கியவர், அவரோடு இணைந்து பிரெஞ்சு திரைப்படத்தில் பணியாற்றியது சந்தோஷம் தரும் அனுபவமாக அமைந்திருந்தது,
இரண்டு மாத காலம் பாண்டிச்சேரி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது, படத்தின் முக்கியத் தொழில்நுட்ப குழுவினர்கள் அனைவரும் பிரான்ஸ் நாட்டினை சேர்ந்தவர்கள்
தமிழ் திரையுலக நடிகர்கள் சிலரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர், மூன்று மாதங்களில் வெளியாக உள்ள இந்த படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற உள்ளது
•••
0Shares
0