சிற்றிதழ்கள்

வலசை, மந்திரச் சிமிழ் என்ற இரண்டு முக்கியமான சிற்றிதழ்கள் இந்தப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கின்றன,  தொடர்ந்து  தீவிரமான இலக்கியப்பங்களிப்பு செய்து வரும் முக்கியமான சிற்றதழ்கள் இவை.

இரண்டும் காத்திரமான உலக இலக்கியப்படைப்புகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்வதுடன் மாற்று அரசியல், கலை மற்றும் பண்பாட்டுத் தளத்தில் நடைபெறும் முக்கியச் சிந்தனைப்போக்குகள், நேர்காணல்கள் என விரிந்த அளவில் தனிக்கவனத்துடன் நேர்த்தியான வடிவமைப்பில் உருவாக்கபட்டுள்ளன,  தன்னலமற்ற உழைப்பும் தீவிர அக்கறையும் கொண்டவை இந்தச் சிற்றிதழ்கள்,

வலசை இதழை கொண்டு வந்திருக்கும்  நண்பர்கள் கார்த்திகைப்பாண்டியன் நேசமித்ரன், மந்திர சிமிழ் இதழை நடத்தும் நண்பர்கள் செண்பகநாதன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்.

இந்த இரண்டு சிற்றிதழ்களும் டிஸ்கவரி புக் பேலஸ் கடையில் கிடைக்கின்றன

•••

சில இலக்கிய இதழ்களின் இணைப்புகள்

http://www.archipelago.org/

http://www.abalonemoon.com/

http://www.bu.edu/agni/index.html

http://www.anderbo.com/

http://www.wetink.com.au/

http://www.doubleroomjournal.com/

http://www.eratiopostmodernpoetry.com/

http://www.eclectica.org/archives/author_index_abc.html

•••

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: