கதைகள் காத்திருக்கின்றன

நாடகக் கலைஞர் ஜெயராவ் சிறந்த நடிகர், பயிற்சி வல்லுனர். கூத்துப்பட்டறையில் பயின்ற கலைஞர். இவர் தியேட்டர் லேப் என்ற நடிப்புப் பயிற்சி மையத்தைக் கே.கே. நகரில் நடத்தி வருகிறார்.

தியேட்டர் லேப் கடந்த பத்து ஆண்டுகளாக நவீன நாடக தயாரிப்புகளிலும், இளம் நடிகர்களை உருவாக்குவதிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது, பள்ளி கல்லூரிகளுடன் இணைந்து நாடகப்பயிற்சி கொடுப்பது, சினிமாவில் நடிக்க விரும்புகிறவர்களுக்குப் பயிற்சி தருவது, தமிழின் முக்கிய நாடகபிரதிகளை மேடையேற்றுவது எனத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இயங்கி வருகிறது

தியேட்டர் லேப்பின் பத்தாண்டு விழாவை முன்னிட்டு நான் தொகுத்த நூறு சிறந்த சிறுகதைகள் நூலில் இருந்து பதினைந்து சிறுகதைகளை நாடகமாக நிகழ்த்த இருக்கிறார்கள், ஒவ்வொரு நாடகமும் பத்து நிமிஷ அளவில் நடைபெறும்.

புதுமைபித்தன், கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், மௌனி, ஜெயகாந்தன், தி. ஜானகிராமன். பி.எஸ். ராமையா. சுந்தர ராமசாமி, அம்பை, முத்துசாமி, அசோகமித்ரன், லா.ச.ரா. பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், எஸ் ராமகிருஷ்ணன் ஆகியோரின் சிறுகதைகள் நாடகமாக நிகழ்த்தப்பட இருக்கின்றன

கதைகள் காத்திருக்கின்றன என்ற இந்த நாடக நிகழ்வு நவீன தமிழ் இலக்கியத்திற்கும் நாடக உலகிற்கும் இணைப்புப் பாலமாக உருவாக்கபட்டுள்ளது. இந்த நாடகத்தை ஜெயராவ் இயக்குகிறார்.

பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள ஸ்பேசஸ் வளாகத்தில் வருகின்ற சனிக்கிழமை, 21.06.2014 மாலை ஆறு மணிக்கு நாடகம் நடைபெற உள்ளது, அவசியம் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறேன்

இடம் :

SPACES
1, Elliots Beach Road
Besant Nagar
Chennai 600090

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: