கெடை காடு

சமீபத்தில் ஏக்நாத் எழுதிய கெடை காடு நாவலைப் படித்தேன். இன்று பெரும்பான்மை நாவல்கள் நகர்மய வாழ்க்கையை எழுதிக் கொண்டிருக்கையில் மண்மணத்துடன், கிடைமாடுகளின் யதார்த்தமான வாழ்க்கையைச் சிறப்பாக எழுதியிருக்கிறார் ஏக்நாத்.

மலை கிராமங்களில் இருந்து மாடுகளைக் கெடை காடு நோக்கி அழைத்துச் செல்வது கண்கொள்ளாத காட்சியாக விரிகிறது.

ஒநாய் குலச்சின்னம் நாவலை வாசிக்கும் போது மங்கோலிய வேட்டை நிலத்தை எவ்வளவு நுட்பமாக எழுதிப்போகிறாரே என வியந்தேன், அந்த விவரணைகளுக்கு இணையாகக் கிடை மாடுகளின் வாழ்க்கையை அதன் தனித்துவமான அனுபவங்களைத் தனது இயல்பான மொழியில், நுட்பமான கதை சொல்லலில் விவரிக்கிறார் ஏக்நாத்.

மேய்ச்சலுக்கு செல்லும் மனிதர்களின் காதல், காமம், வாழ்க்கை நெருக்கடிகள்  என உயிரோட்டமான நிகழ்வுகளை பதிவு செய்திருப்பது நாவலின் தனித்துவம் என்பேன்

இந்த நாவலின் கதைகளம் தமிழுக்கு மிகவும் புதியது. உச்சிமகாளி, மீசை சுப்பையா,தவிட்டான், கேசரி, நண்டு என மறக்கமுடியாத கதாபாத்திரங்கள் வழியே கதை நீள்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமப்புற மேய்ச்சல் மாடுகளின் வாழ்வியலை  சிறந்த நாவலாக்கியிருக்கிறார். காவ்யா பதிப்பகம் இந்நாவலை வெளியிட்டுள்ளது.

ஏக்நாத்திற்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள்.

Archives
Calendar
February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
Subscribe

Enter your email address: