வேண்டுகோள்

தசைச்சிதைவு நோயால் பாதிக்கபட்ட வானவன் மாதேவி, வல்லபி இருவரும் ஆதவ் அறக்கட்டளை என்ற தன்னார்வ நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.  உயிருககுப் போராடிய நிலையிலும் இவர்கள் மேற்கொண்டு வரும் சேவை மகத்தானது.

தன்னைப் போலவே தசைச்சிதைவு நோயால் போராடும் பலருக்கும் மருத்துவ உதவி அளித்து வருகிறார்கள்

அந்தப்பணிக்கு நிறைய பொருளுதவி தேவைப்படுகிறது.

விருப்பமுள்ள நண்பர்கள் உதவி செய்யும்படியாக கேட்டுக் கொள்கிறேன்

••

அன்பு நண்பர்களுக்கு,

வணக்கம், என் பெயர் வானவன் மாதேவி. எனது தங்கை பெயர் இயல் இசை வல்லபி. நானும் எனது தங்கையும் சிறு வயதில் எல்லோரையும் போல ஓடிவிளையாடி களித்திருந்தோம்.

சுமார் பத்து வயதில்  எங்கள் உடல் நலனில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் எங்களைப்  பரிசோதித்து எங்களுக்கு தசைச்சிதைவு நோய்   (Muscular Dystrophy) தாக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு உலகில் எங்கும் வைத்தியம் இல்லை என்றும் லட்சத்தில் ஒருவரை இந்த நோய் தாக்குகிறது என்றும், (தற்போது 3000  நபர்களில் ஒருவருக்கு இந்நோய் தாக்குதல் இருப்பதாக ஒரு கணக்ககெடுப்பு சொல்கிறது). கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு விரைவில் உயிரிழப்பார்கள்  என்றும் சொன்னார்கள். ஆனால் நாங்கள் இன்று வரை நம்பிக்கையும் இலக்கியமும் கொடுக்கும் பலத்தினாலும் மாற்று மருத்துவங்களின் உதவியாலும் வாழ்ந்து வருகிறோம்.

மேலும் இது போன்ற குணப்படுத்த இயலாத கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு உதவவும் அதற்கெல்லாம் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கும் சுற்றுச்சுழல் சீர்கேட்டைத் தடுக்கவும் கடந்த 2009 ம் ஆண்டு “ஆதவ் ட்ரஸ்ட்” என்ற அமைப்பைத்துவக்கி சிறப்பாக நடத்திவருகிறோம்.

“ஆதவ் ட்ரஸ்ட்” மூலம் இதுவரை பல நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு நல்ல நம்பிக்கையும் இலவச மருத்துவ உதவியும் உபகரணங்களும் வழங்கியுள்ளோம். தசைச்சிதைவு நோய் மற்றும் சுற்றுச்சுழல் குறித்த விழிப்புணர்வும் வழங்கியுள்ளோம். இந்நோயை தொடக்கநிலையிலேயே கண்டறிந்து சிகிச்சைபெற்றால் உடல்நலனை தக்கவைத்துக்கொள்ளவும், ஓரளவு பாதிப்பிலிருந்து மீட்கவும் மாற்று மருத்துவ முறைகளில் சாத்தியமாகிறது.

தற்போது வாடகை கட்டிடத்தில் சிகிச்சைமையம் இயங்கி வரும் காரணத்தால் தங்கி சிகிச்சை பெற விரும்புவோருக்கு உதவி செய்ய   இயலாத நிலை எங்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது.  இந்நிலையில் “ஆதவ் ட்ரஸ்ட்” தனது சேவையை மேலும் விரிவாக்க முடிவுசெய்துள்ளது.

தற்போது திட்டமிட்டுள்ள பணிகள் :

  1. மறுவாழ்வு மையம், மாற்று மருத்துவ ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை உடனடியாக அமைத்தல்,
  2. மாவட்டந்தோறும் மாற்று மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்     நடத்துதல்,
  3. சிறப்புப்பள்ளி மற்றும் சுயதொழில் மையம் உருவாக்குதல்,
  4. பள்ளிகளில் சுற்றுச்சுழல் மற்றும் தசைச்சிதைவு உள்ளிட்ட நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,
  5. நூலகங்களுக்கு உதவி செய்தல்

நண்பர்களே, நீங்கள் ஒத்துழைத்தால் இந்தப்பணிகளை மிகச்சிறப்பாகவும் விரைவாகவும் செய்து முடிக்கலாம், இப்பணிகளில் நீங்கள் எந்த வகையில் பங்கேற்க இயலும் என்பதை கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டுகூறவும்,

வானவன் மாதேவி    -  9976399403

இயல் இசை வல்லபி  –  9488944463

நிதி உதவி செய்ய விரும்புவோர் “Aadhav Trust” என்ற பெயருக்கு காசோலை / வரைவோலையாக

Aadhav Trust

489-B ,Bank stop colony,

Hasthampatty,Salem-636007.  என்ற முகவரிக்கு அனுப்பவும்.

அல்லது

CANARA BANK – Suramangalam branch,

A/c Name       : AADHAV TRUST,

S.B  A/C- NO  : 1219101036462,

IFSC CODE     : CNRB0001219.

என்ற வங்கி கணக்கில் பணம் செலுத்திவிட்டு தாங்கள் பெயர் மற்றும் தெளிவான முகவரியை தொலைபேசி எண்ணுடன் எங்களது தொலைபேசி எண்ணிற்கோ அல்லது mailaadhavtrust@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.

Face Book Page  -  https://www.facebook.com/pages/Aadhav-Trust/185118278177615

Website : aadhavtrust.org

இப்படிக்கு,

இ.வானவன் மாதேவி

(தலைவர், ஆதவ் டிரஸ்)

****

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: