அ.ரெங்கசாமிக்கு விருது

அ.ரெங்கசாமி  மலேசியாவின் மிக முக்கிய எழுத்தாளர். நேதாஜியின் விடுதலைப்போரை முன்வைத்து இமயத்தியாகம் என்ற நாவலையும்,  ஜப்பானியர்கள் மரண ரயில்வே அமைக்கத் தமிழர்களைக்  கொண்டு சென்ற அவலக் கதையை “நினைவுச் சின்னம்” என்னும் நாவலாகவும் எழுதியிருக்கிறார்
ஆங்கிலேய ஆதிக்கத்துக்கும் மலாயா கம்யூனிஸ்டுக் கட்சிக்குமான உள்நாட்டுப்போரில் சிக்கி தவித்த மலேயத் தமிழர்கள் கதையை  ”லங்காட் நதிக்கரை” என்னும்  நாவலாக எழுதியிருக்கிறார். வரலாற்றுபிரக்ஞையும் கலைமேதமையும் கொண்ட அவரது படைப்புகள் மிக முக்கியமானவை.
அவருக்கு வல்லினம் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.
அ. ரெங்கசாமி  அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள்
•••
விழா குறித்த விபரங்களை நவீன் அனுப்பியிருக்கிறார்.
**
2.11.2014ல் வல்லினம் இலக்கியக்குழு முதன் முறையாக ‘வல்லினம் விருது’ வழங்கும் நிகழ்வை நடத்துகிறது. விருது தொகையாக 5000 ரிங்கிட்டுடன் அ.ரெங்கசாமி அவர்களின் ஆவணப்படம் மற்றும் அவரது வாழ்வைச்சொல்லும் நூலும் இந்நிகழ்வில் வல்லினம் குழுவினர் மூலம் வெளியீடு காண்கிறது.
இதே நிகழ்வில் இயக்குனர் லீனா மணிமேகலையும் கலந்துகொண்டு தனது ஆவணப்படங்கள் குறித்த அறிமுகத்தைச் செய்வார். அவருடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெறும்.
வல்லினம் ஆறாவது ஆண்டாக நடத்தும் கலை இலக்கிய விழாவில் இந்த அங்கங்கள் இடம்பெறுகின்றன.
கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் மதியம் 2.00 முதல் மாலை 5.00 வரை நடைபெறும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.
அனைத்துத் தொடர்புக்கும் : ம.நவீன் 0163194522
***
Archives
Calendar
May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: