அண்டசராசரம்

இந்திய தேசிய ராணுவம் மற்றும் நேதாஜியின் சுதந்திரப்போர் குறித்து சிறார்கள் அறிந்து கொள்ளும்படியாக  துப்பறியும் கதையாக எழுதப்பட்ட நாவலிது. உயிர்மை பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

இந்திய தேசிய ராணுவத்திற்காக நேதாஜி உருவாக்கிய ஆசாத் வங்கியில் (Azad Hind Bank) இருந்த பணமும் சேமிப்பும் அவரது மரணத்தின் பிறகு என்னவாகின என்ற புதிர் இன்றும் தொடர்ந்து கொண்டேவருகிறது.

நேதாஜியின் அஸ்தியோடு அவரது சேமிப்பாக மிஞ்சிய ரூ 200 மட்டுமே ஜப்பானியர்களால் ஒப்படைக்கபட்டதாக ஒ.பி.மத்தாய் தனது குறிப்பில் கூறுகிறார்.

பலகோடி மதிப்புள்ள அந்த வங்கியில் இருந்த பணமும் நகைகளும் எங்கே போயின என்பதைத் தேடி அலைகிறது ஒரு கூட்டம். அண்டசராசரம் என்பது அந்த பணமிருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்கான ரகசிய சொல்.

நேதாஜி விட்டுச்சென்ற பணத்தைக் கண்டுபிடிப்பதற்காக சாத்யாகி என்ற கிழவரும், திப்பு என்ற 14 வயது சிறுவனும் முனைகிறார்கள். அவர்கள் இருவரின் விநோத துப்பறியும் முறைகளும், அதன் விளைவுகளும் வேடிக்கையானவை.

இந்தத் தேடுதலின் ஊடாக அவர்கள் இந்திய தேசிய ராணுவத்தின் பங்களிப்பு பற்றியும் மதுரையில் வாழும் முன்னாள் ஐஎன்ஏ வீரர்கள் பற்றியும் அறிந்து கொள்கிறார்கள்

***

Archives
Calendar
May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: