சஞ்சாரம் – வெளியீட்டுவிழா

நேற்று எனது சஞ்சாரம் நாவல் வெளியீட்டுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது, அரங்கு நிரம்பிய கூட்டம்.

கவிஞர் ரவி சுப்ரமணியம் ஔவையாரில் துவங்கி கல்யாண்ஜி வரை தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைப் பாடலாகப் பாடினார்

அற்புதமான குரல். அருமையாகப் பாடினார். அவருக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றி

டாக்டர் கே.எஸ்.சுப்ரமணியம் நாவலை வெளியிட ஜென் ராம் பெற்றுக் கொண்டார்.

அதை அடுத்து பேராசிரியர் அருணன் சஞ்சாரம் நாவல் குறித்து அறிமுகவுரையை வழங்கினார், நாவலை முழுமையாகப் படித்து உள்வாங்கிக் கொண்டிருந்த அருணன் இந்த நாவல் ஏன் முக்கியமானது என்பதைப் பற்றிப் நாவலின் பல்வேறு இடங்களைச் சுட்டிக்காட்டி மிக விரிவாக, ஆழமாகப் பேசினார். அருணன் அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய நன்றிகள்

ஊடகவியலாளர் ஜென்ராம், கவிஞர் மனுஷ்யபுத்திரன் இவரும் சஞ்சாரம் நாவல் குறித்து என்னுடன் விரிவான கலந்துரையாடலை நிகழ்த்தினார்கள்,

சஞ்சாரம் நாவலை ஏன் எழுதினேன், அதன் கட்டுமானம், மொழி, கதை சொல்லும் முறை, நாவலின் பின்னுள்ள அனுபவங்கள் பற்றி எடுத்துக் கூறினேன். ஒரு மணி நேரம் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது

ஒரு நாவலாசிரியன் தனது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இவையே என்பதால் தான் இப்படியான ஒரு கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து,

பார்வையாளர்களுக்கு இக்கலந்துரையாடல் மிகவும் பிடித்திருந்தது சந்தோஷம் அளித்தது

உயிர்மை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் கலந்து கொண்ட நண்பர்கள், எழுத்தாளர்கள், திரைத்துறை கலைஞர்கள், வாசகர்கள், பத்திரிக்கையாளர்கள், இணைய எழுத்தாளர்கள்  அத்தனை பேருக்கும் எனது மனம் நிரம்பிய நன்றி.

நேர்த்தியான புகைப்படங்களை எடுத்து தந்த நண்பர் பிரபு காளிதாஸிற்கும் மிகுந்த நன்றி

::

Photo credits:  Prabhu Kalidas

••

0Shares
0