புத்தகக் கண்காட்சியில்

சென்னை புத்தகக் கண்காட்சியில் நாளை 17ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஜென் கதைகள் குறித்துப் புத்தன் சொல்லாத கதைகள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன் . கண்காட்சி வளாக அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது

***

கடந்த இரண்டு நாட்களாகப் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்

1)    பௌன்சர் -அலெக்ஸாண்ட்ரோ ஜோடோரோவ்ஸ்கி – முழுநீள கிராபிக் நாவல். – லயன் காமிக்ஸ்

2)    காளிதாசனின் கதை – சைலேஷ் -பப்ளிகேஷன்ஸ் டிவிசன்

3)    கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது- மாயா ஏஞ்சலோ -தமிழில் அவை நாயகன்- எதிர் வெளியீடு

4)    யாருக்கானது பூமி -பா. சதீஸ் முத்துகோபால்- சூழலியல் கட்டுரைகள் அகநாழிகை பதிப்பகம்

5)    ஆச்சரியம் எனும் கிரகம் -ஷிஞ்ஜி தாஜிமா -சாகித்ய அகாதமி

6)    நக்ஷத்ரவாஸி -பிரேமிள் -நாடகம் -    திரிகோணேஷ் பிரசுரம்

7)    வாழ்வின் அழைப்பு -மொழிபெயர்ப்புக் கதைகள்- புதுப்புனல்

8)    சிந்தையில் ஆயிரம் -ஜெயகாந்தன்- மீனாட்சி பதிப்பகம்

9)    முஸ்லீம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம்

–இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்

10)   உண்மை மனிதனின் கதை- பரீஸ் பொலெவோய் -என்சிபிஹெச் வெளியீடு

11)   Conversations – Doris lessing – Ontario press-  Canada

12)  The Nehrus – B.R. Nanda -The Johnday company. Newyork

13)  Under the Red Flag Stories -Ha Jin

14)  The Prime of Life – Simone de Beauvoir.

***

சாகித்ய அகாதமி, நேஷனல்புக் டிரஸ்ட், பப்ளிகேஷன்ஸ் டிவிசன், சில்ரன் புக் ட்ரஸ்ட் ஆகிய நான்கு கடைகளிலும் மலிவு விலையில் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு நூல்கள் கிடைக்கின்றன. குறிப்பாக இந்திய ஒவியங்கள் குறித்த அரிய புத்தகங்கள் பப்ளிகேஷன்ஸ் டிவிசனில் பாதி விலையில் கிடைக்கின்றன

அரங்க எண்கள்

சாகித்ய அகாதமி:289

பப்ளிகேஷன்ஸ் டிவிசன்: 232 /233

சில்ரன் புக் ட்ரஸ்ட்: 276 /277

••

குழந்தைகளுக்கான புத்தகங்கள் வாங்க விரும்புகிறவர்கள் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் பார் சில்ரன் மற்றும் சில்ரன் புக் டிரஸ்ட் இரண்டு அரங்கினைப் பார்வையிடவும்.

•••

உயிர்மை பதிப்பக அரங்கில் எனது சஞ்சாரம் நாவல் , எஸ் ராமகிருஷ்ணன் சிறுகதைகள் மூன்று தொகுதிகள், உலகசினிமா புதிய பதிப்பு  உள்ளிட்ட அனைத்து  நூல்களும் கிடைக்கின்றன.

அரங்கு எண்   : 159/ 60 / 219/ 220

••

விகடன் பதிப்பக அரங்கில் நான் எழுதிய உணவு யுத்தம், துணையெழுத்து, கதாவிலாசம், சிறிது வெளிச்சம், எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா, ஏழு தலை நகரம் உள்ளிட்ட அனைத்து நூல்களும் கிடைக்கின்றன

அரங்கு எண் : 351/352/353

••

அண்டசராசரம், சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்  இரண்டு சிறார் நாவல்களும் உயிர்மை பதிப்பகத்தில் கிடைக்கின்றன, கதைக்கம்பளம் என்று நான் எழுதிய ஏழு சிறார் நூல்கள் பாரதி புத்தகாலயத்தில் கிடைக்கின்றன, சிரிக்கும் வகுப்பறை, அக்கடா, ஆலீஸின் அற்புத உலகம் மற்றும் கிறுகிறுவானம் நூலின் ஆங்கில மொழியாக்கம் ஆகியவை வம்சி பதிப்பக வெளியீடாகக் கிடைக்கின்றன

புக்ஸ் பார் சில்ரன்: அரங்கு எண்  6 / 7

வம்சி:அரங்கு எண் 582 / 583

••

சுற்றுச்சூழல் சார்ந்த புத்தகங்களை வாங்க விரும்புகிறவர்கள் பூவுலகின் நண்பர்கள், இயல்வாகை அரங்குகளை பார்வையிடவும்,  பூவுலகின் நண்பர்கள் நான் எழுதிய ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது, புல்லினும் சிறியது ஆகிய இரண்டு நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள்

அரங்கு எண்: 554

••

நான் தொகுத்த நூறு சிறந்த தமிழ் சிறுகதைகள் தொகுப்பு டிஸ்கவரி புக் பேலிஸில் கிடைக்கிறது.

அரங்கு எண் :543 /544

••

எனது உப பாண்டவம் நாவல் விஜயா பதிப்பக அரங்கில் கிடைக்கிறது

அரங்கு எண் :321 /322

••

நன்றி

புகைப்படங்கள்: பிரபு காளிதாஸ்

••

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: