காதலின் சங்கீதம்

வாங் கார் வாயின் IN THE MOOD FOR LOVE படத்தில் இடம் பெற்றுள்ள Yumeji’s theme கேட்டிருக்கிறீர்களா.

காதலைக் கொண்டாடும் மிகச்சிறந்த பின்னணி இசைக் கோர்வை.

மனம் சலித்துப்போகும் நேரமெல்லாம் இதை திரும்பத் திரும்ப கேட்கிறேன்.

வாங் கார் வாயின் “IN THE MOOD FOR LOVE ஆசிய சினிமாவின் சாதனை.

ஹாங்காங்கில் 1960களில் நடைபெறுகிற மாறுபட்ட காதல் கதை. ஒளிப்பதிவாளர் Christopher Doyle, வண்ணங்களை பயன்படுத்தும் வித்திலும் காட்சிக்கோணங்களிலும் புதியதொரு அனுபவத்தை உருவாக்கி தருகிறார், உன்னதமான இசை.  படத்தொகுப்பு, கலை அமைப்பு, இயக்கம் என புதிய அழகியலை உருவாக்கிய திரைப்படம்

ப்ரெய்ன் ஃபெரியின் “IN THE MOOD FOR LOVE” இசை துணுக்கிலிருந்தே படத்தின் தலைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது

இப்படத்தின் soundtrack தனி சிடியாக வெளியாகியுள்ளது. இணையத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளக் கிடைக்கிறது

In the mood for love(2000): Yumeji’s theme

https://youtu.be/23oBMOvt85o

0Shares
0