ஒளிச்செங்கோ

பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான சுந்தரபுத்தன் எனது விருப்பத்திற்குரிய நண்பர்.

நுண்கலைகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் நவீன ஒவியங்கள் குறித்து வண்ணங்களின் வாழ்க்கை என்ற சிறந்த நூலை எழுதியிருக்கிறார். தன் பால்யத்தையும் கிராமத்து வாழ்க்கை நினைவுகளையும் கூறும் வகையில் மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு என்ற நூலை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இவரது தந்தை நடராசன் என்கிற சு. ஒளிச்செங்கோ பல ஆண்டுகளாக மாலை முரசு நாளிதழில் பகுதிநேர செய்தியாளராகப் பணியாற்றியவர். திருவாரூருக்கு அருகில் உள்ள கண்கொடுத்தவனிதம் கிராமத்தில் வசிக்கிறார். திராவிடர் கழகத்தில் தீவிரமாகச் செயல்பட்ட இவர் தந்தை பெரியார், சி. பா. ஆதித்தனாருடன் நேரடி அறிமுகம் கொண்டிருந்தவர். அந்த அனுபவங்கள் குறித்த  விரிவான நேர்காணலை அமெரிக்காவில் வசிக்கும் இயக்குனர் சொர்ணவேல் படமாக்கியுள்ளார்.

ஒளிச்செங்கோவின் நேர்காணல்  தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தந்தை பெரியாருடன் தனக்கிருந்த உறவு மற்றும் பெரியாரின் ஆளுமை குறித்த ஒளிச்செங்கோவின் உணர்ச்சிப்பூர்வமான பேச்சு காலத்தின் குரலாகவே ஒலிக்கிறது.

ஒளிச்செங்கோவின் நேர்காணலை ஆவணப்படுத்திய சொர்ணவேல் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

இணைப்பு

https://www.youtube.com/watch?v=CN0psNrSaJo

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: