பத்து இணையதளங்கள்

 


கல்லில் வடித்த கவிதைகள். :சிற்பங்கள், ஒவியங்கள் மற்றும் பராம்பரியமிக்க கோவில்கள், என்று தமிழக நுண்கலையின் சிறப்புகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் இணையதளமிது. தமிழில் நான் தொடர்ந்து வாசிக்கும் இணையதளங்களில் இதுவும் ஒன்று. ஆங்கிலத்திலும் இந்த இணையதளம் வாசிக்க கிடைக்கிறது. புகைப்படங்கள். விளக்கங்கள், ஆய்வுகுறிப்புகள் என்று நேர்த்தியாகவும் நுட்பமாகவும் சிற்பக்கலை குறித்த கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இணையதளத்தின் வடிவமைப்பே அழகாக உள்ளது. சரித்திரம், தொல்லியல் குறித்த பல்வேறு இணைய தள இணைப்புகளும் இதில் காணப்படுகின்றன. 


http://www.poetryinstone.in


 


உலகின் சிறந்த குறும்படங்கள் :


தரமான குறும்படங்கள் காண விரும்புகின்றவர்களுக்கான இணையதளம். திரைப்பட விழாக்களில் பரிசு பெற்ற உலகின் முக்கிய குறும்படங்கள் இந்த இணையதளத்தில் காட்சிக்கு கிடைக்கின்றன. குறும்படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன் உதாரணங்கள் போல இந்த இணையத்தில் உள்ள குறும்படங்கள் காட்சியளிக்கின்றன


http://watchandcut.blogspot.com 


மாற்று சிந்தனை உரைகள் :கல்வி, கலாச்சாரம், விஞ்ஞானம், பொருளதாரம், தொழில் நுட்பம், சமகால நிகழ்வுகள் குறித்து உலகின் முக்கிய சிந்தனையாளர்கள், ஆய்வாளர்களின் உரைகளின் தொகுப்பு வீடியோபதிவுகளாக இந்த இணையத்தில் உள்ளது. யூடியூப் போல இந்த இணைய தளத்தில்  வீடியோ பகுப்பு செய்யப்பட்டுள்ளது. மாற்றுக்கல்வி முயற்சிகள் குறித்த தீவிரமாக வழிகாட்டுதல்கள், மற்றும் சொற்பொழிவுகள் கொண்ட வீடியோக்கள் இதில் உள்ளன.


பொழுது போக்கினைத் தாண்டி செயல்தளத்திற்கான வழிகாட்டுதலுக்கு உதவும் சிறந்த இணையதளம், இதை தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். இதில்  சில உரைகள் தமிழாக்கம் செய்யப்பட்டும் காட்சிக்கு கிடைக்கின்றன.http://www.ted.com


சத்யஜித் ரே பற்றிய ஆவணப்படம் :


சத்யஜித்ரே பற்றி ஷியாம் பெனகல் எடுத்து டாகுமெண்டரி படம் இந்த இணையதளத்தில் காணக்கிடைக்கிறது. பகுதி பகுதியாக உள்ள இதை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். திரைப்பட பயிலரங்குகள்.இந்திய சினிமா ஆளுமைகள் குறித்த கட்டுரைகள், விமர்சனங்கள், விவாதங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.http://windsfromtheeast.blogspot.comசமகால துருக்கி கவிதைகள்:சமகால துருக்கி கவிதைகளின் ஆங்கில மொழியாக்கம் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன. துருக்கியின் நவீன கவிதை குறித்த அறிமுகம் மற்றும் முக்கிய கவிஞர்கள் பற்றிய அறிமுகங்கள் காணப்படுகின்றன. .


http://www.cs.rpi.edu/~sibel/poetry/index.html


ஈரானிய சினிமா :


ஈரானியத் திரைப்படங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான இணைய இதழ். சமகால ஈரானிய சினிமா குறித்த கட்டுரைகள். நேர்காணல்கள். இதில் காணக்கிடைக்கின்றன.


http://www.film-international.com


இருமொழி இலக்கியம் :


ஹிந்தி ஆங்கிலம் என இருமொழிகளில் இயங்கும் இந்த இணைய இதழ் உலகின் சிறந்த கவிதைகள், கதைகள் மற்றும் நேர்காணல்களை ஹிந்திக்கும் ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்ப்பு செய்கிறது. அத்துடன் ஹிந்தியில் உள்ள சமகால  இலக்கியவாதிகளின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடுகிறது. தீவிர இலக்கியவாசகர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டிய இணையஇதழ். அச்சு வடிவிலும் இந்த இதழ் வெளியிடப்படுகிறது.


http://pratilipi.in/


இந்திய சினிமா : சத்யஜித் ரே  மணிகௌல், ரித்விக் கடாக் போன்ற திரை ஆளுமைகளின்  கட்டுரைகள், நேர்காணல்கள், அவர்களது திரைப்படங்கள் குறித்த ஆய்வுகட்டுரைகள் மற்றும் உலக சினிமாவின் போக்குகள், திரையியல் பற்றிய சிறப்புகவனம் என்று அழகாக உருவாக்கபட்டுள்ள இணையதளமிது. ஒளிப்பதிவு குறித்த மணிகௌலின் சிறப்பான கட்டுரையொன்று இதில் உள்ளது.


http://www.indianauteur.com


புத்தக ரசனை  :  தான் வாசித்த புத்தகங்கள் குறித்து, எழுத்தாளர்கள் இலக்கிய போக்குகள் குறித்தும் உலகு தழுவிய தனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர் ஜிம் முர்டாக். இவர் சிபாரிசு செய்யும் புத்தங்களும் எழுத்தும் தேர்ந்த ரசனைக்குரியவை.


http://jim-murdoch.blogspot.com/


சில்வியா பிளாத் கவிதைகள் : சில்வியா பிளாத் தனது கவிதையினை  வாசிக்கும் வீடியோ காட்சிகள். சில்வியாவின் குரல் மயக்கமூட்டக்கூடியது. அந்த குரலில் டாடி என்ற அவரது கவிதையை கேட்பது அற்புதமான அனுபவமாக உள்ளது.


http://www.youtube.com/watch?v=6hHjctqSBwM


http://www.youtube.com/watch?v=esBLxyTFDxE


****


 


 

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: