மாயவெளிச்சம்

இன்று காலை William Trost Richards என்ற அமெரிக்க ஒவியர் வரைந்த Moonlight On Mount Lafayette என்ற வாட்டர் கலர் ஒவியத்தை இணையத்தில் கண்டேன்.

நிலவொளியை எவ்வளவோ ஒவியர்கள் வரைந்திருக்கிறார்கள். ரிச்சர்ட்ஸ் வரைந்துள்ள மாயவெளிச்சம் பிரமிப்பூட்டுகிறது. இரவின் தனிமையை இதை விடச் சிறப்பாக வரைந்துவிட முடியாது என்றே தோன்றுகிறது. கலைந்த மேகங்களுக்குள் ஒளிர்கிறது நிலா. பேரமைதி ததும்பும் நிலவெளி. வடஇந்திய ரயில் பயணம் ஒன்றில் இது போன்ற ஒரு காட்சியை நிலாவெளிச்சத்தில் கண்டிருக்கிறேன். நிமிஷ நேர தரிசனமது. இந்த ஒவியத்திலோ அந்தத் தருணம் நிரந்தரமாக்கபட்டிருக்கிறது. தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் கூட நிலவொளி கரைந்திருக்கிறது. பனிமூட்டம் போல மிருதுவான, அழகான வெளிச்சமது. புதர் செடிகளில் பூக்கள் அரும்பியுள்ளன. பாதை தான் எவ்வளவு ரம்மியமாக இருக்கிறது. உயர்ந்து நிற்கும் இரு மரங்களும் மாய இரவின் சாட்சிகள் போலும். இயற்கையின் திமிறி நிற்கும் மார்பகங்களைப் போலிருக்கின்றன முகடுகள். இன்றைய நாளை இனியதாக்கியது இந்த ஒவியம்.

Moonlight On Mount Lafayette 1873ல் வரையப்பட்டிருக்கிறது.

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: