எனது புதிய புத்தகங்கள் கிடைக்குமிடம்

 


மலைகள் சப்தமிடுவதில்லை.  (கட்டுரைகள் ) பக்கம்: 240      விலை:140


இந்த நூலில் தஸ்தாயெவ்ஸ்கி, தால்ஸ்தாய். செகாவ். இதாலோ செவோ, கார்க்கி, ஷெல் சில்வர்ஸ்டைன், பாஷோ போன்ற இலக்கிய ஆளுமைகளை பற்றியும், இயற்கை குறித்த எனது புரிதல் மற்றும்  அது சார்ந்த நினைவுகளை விவரிக்கும் சேவற்சண்டை, இந்தியாவை நடந்தே சுற்றிய மனிதர். தாமரை பூத்த குளம், ரயிலோடும் தூரம், போன்ற வாழ்வியல் அனுபவ கட்டுரைகளுமாக மொத்தம் 48 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.


நகுலன் வீட்டில் யாருமில்லை (குறுங்கதைகள் ) பக்கம்: 136     விலை: 80


குறுங்கதைகள் (Tales )மனித மனதின் ஆதார இச்சைகளை, ஏக்கங்களை, துயரங்களை எதிர்பாராமையை பேசுகின்றன. குறுங்கதைகளின் மீது எப்போதுமே எனக்கு விருப்பமுண்டு, நான் புதிதாக எழுதிய 50 குறுங்கதைகள்  இத்தொகுப்பில் உள்ளன


பேசத்தெரிந்த நிழல்கள் (சினிமா கட்டுரைகள் ) பக்கம்: 144           விலை:85


இவை உலக சினிமா பார்வையாளனின் குறிப்புகள் . என்னை பாதித்த சில  உலக திரைப்படங்கள், அதற்கான காரணங்கள், அதிலிருந்து மீளும் நினைவுகள். நான் சந்தித்த சில தமிழ் திரை நட்சத்திரங்கள் அவர்கள் குறித்த ஞாபகங்கள். ஆசிய சினிமா மீதான எனது கவனம் இவை சார்ந்த கட்டுரைகளே இந்த தொகுப்பு


வாசக பர்வம். (எழுத்தாளர்கள் குறித்த கட்டுரைகள் )பக்கம்:  192   விலை: 110


உயிர்மையில் தொடராக வெளிவந்து வாசகர்களின் பரந்த கவனத்திற்கும் பாராட்டுதலுக்கும் உள்ளான  எழுத்தாளர்கள் குறித்து நான் எழுதிய பத்தியான வாசகபர்வம் தொகுக்கபட்டு தனி நூலாக வெளிவருகிறது.


இந்த நூலில் வைக்கம் முகமது பஷீர், சுஜாதா,பிரமீள், விக்கிரமாதித்யன், சி.சு. செல்லப்பா பிரபஞ்சன், பா. சிங்காரம் கோபி கிருஷ்ணன், ந.முத்துசாமி, அசோகமித்ரன், கி.ராஜநாராயணன். ஏ.கே. ராமானுஜன், வண்ணநிலவன், வண்ணதாசன், கோணங்கி, கவிஞர் மீரா, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என்று தமிழ் இலக்கியத்தின் தனித்த ஆளுமைகளை நான் தேடிச் சென்று சந்தித்த நினைவுகளையும், அவர்களது படைப்புலகின் மீதான எனது நெருக்கத்தையும் பதிவு செய்திருக்கிறேன்.


 


நான்கு புத்தகங்களின் மொத்த விலை Rs. 415


 


எனது புதிய புத்தகங்கள் புத்தக கண்காட்சியில்


உயிர்மை கடை எண் p12ல் கிடைக்கின்றன


**


இணையத்தில் வாங்க விரும்புவோர் உயிர்மை  ஆன்லைன் தொடர்பு கொள்க


http://www.uyirmmai.com/Publications/Default.aspx


http://www.udumalai.com/

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: