கர்ண மோட்சம் தேசிய விருது

நான் கதை திரைக்கதை வசனம் எழுதி முரளிமனோகர் இயக்கிய கர்ணமோட்சம் குறும்படம் இந்த ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கிறது. சிறந்த கலை மற்றும் கலாச்சார பிரிவில் (Best Arts/Cultural Film )இக்குறும்படம் சிறந்த படமாக தேர்வு பெற்று ரஜத் கமல் விருதை பெற்றுள்ளது.  இப்படம் சென்னை எம்.ஜி. ஆர். திரைப்பட கல்லூரியின் சார்பில் தயாரிக்கபட்டது.கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறந்த படம் சிறந்த இயக்கம் சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட மூன்று தமிழக அரசின் விருதுகளுடன் இருபதிற்கும் மேற்பட்ட  இந்திய, சர்வதேச திரைப்பட விழா விருதுகளை வென்றுள்ள இப் படம் தற்போது தேசிய விருதை வென்றுள்ளது பாராட்டிற்குரியது. இதற்கு காரணமாக இருந்த சென்னை திரைப்படக்கல்லூரிக்கும், இதனை இயக்கிய முரளிமனோகருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.நான் கதை திரைக்கதை வசனம் எழுதி சென்னை திரைப்படக்கல்லூரியை சேர்ந்த லோகேஷ் இயக்கிய மற்றவள் என்ற குறும்படம் சென்னையில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை குறும்பட போட்டி மற்றும் மதுரையில் நடைபெற்ற தென்திசை குறும்பட போட்டிகளில் பாராட்டிற்குரிய படமாக விருது பெற்றுள்ளது. அவருக்கும்  எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: