எல்.வி.பிரசாத்.

தமிழ் திரையுலகின்  மிகமுக்கிய ஆளுமைகளில் ஒருவர் எல்.வி.பிரசாத்.

இவரது தயாரிப்பிலும் இயக்கத்திலும் வெளியான படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளன.

பிரசாத் லேப், மற்றும் பிரசாத் அரங்குகள்  இன்றும் அவரது பெருமை கூறுகின்றன.

இணையத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்த போது எல்.வி. பிரசாத் அவர்களின் பழைய புகைப்படங்கள் காணக்கிடைத்தன.   அதைக் காணும் போது ஏனோ பரவசமாக இருந்தது.

பிரபல ஒளிப்பதிவாளர் மார்கஸ் பட்லேயின் புகைப்படத்தை இதில் தான் முதன்முறையாகப் பார்க்கிறேன். அபூர்வமான புகைப்படமது

ராஜ பார்வை படத்தில்  எல்.வி.பிரசாத் தாத்தாவாக நடித்திருக்கிறார். மறக்கமுடியாத கதாபாத்திரம்.

சினிமாவில் சேரவேண்டுமென விரும்பி தனது  20-வது வயதில் மும்பைக் குச் சென்ற எல்.வி.பிரசாத், தையற்கடை உதவியாளராக, காவலாளியாக, தியேட்டரில் டிக்கெட் கிழிப்பவராக உழைத்து முன்னேறியவர். இந்தியாவின் முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா’-வில் நடித்திருக்கிறார். அதன் பிறகு இயக்குநராக பல வெற்றிப் படங்களை இயக்கினார். தயாரிப்பாளர் ஆனார்.
இவர் குறித்த தனது நினைவுகளை தி இந்து கட்டுரை ஒன்றில் சிறப்பாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்
எல்.வி.பிரசாத்            சென்னையில் பிரசாத் ஸ்டுடியோ வைத் தொடங்கினார். அது பிரபலமாக வளர்ந்தது. நான்கு மாநிலங்களில் கலர் லேபரெட்டரி ஆரம்பித்த பெருமை அவருக்கு உண்டு. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் இயக்கி, உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வெற்றி பெற்ற ‘ஏக் துஜே கேலியே’ ஹிந்தி படத்தை தயாரித்தார். அப்படத்தின் வெற்றி விழா மும்பை மராத்தா மந்தீர் தியேட்டரில் நடந்தபோது, பிரசாத் அவர்கள் திடீரென்று அழ ஆரம்பித்துவிட்டார். அதைப் பார்த்த எல்லோரும் பதறிவிட்டார்கள். அப்போது பிரசாத் அவர்கள் சொன்னார்: ‘‘இந்த தியேட்டரில்தான் ஒரு காலத்தில் நான் வாட்ச்மேனாகவும், டிக்கெட் கிழித்துக் கொடுப்பவனாகவும் வேலை செய்தேன். அதே தியேட்டருக்கு ஒரு வெற்றிப் படத் தயாரிப்பாளராக வந்தபோது பழைய நினைவுகளெல்லாம் வந்து என்னை நெகிழ வைத்துவிட்டது’’ என்றார்
எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளியான மிஸ்ஸியம்மா  என்றும் என் விருப்பத்திற்குரிய படம்.
எனையாளும் மேரி மாதா பாடலும்  சாவித்திரியின்  கனிந்த முகமும் நினைவில் ஆழமாகப் பதிந்துள்ளன.02.07.2017
Archives
Calendar
November 2017
M T W T F S S
« Oct    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
Subscribe

Enter your email address: