அன்பும் நன்றியும்

நேற்று டிஸ்கவரி புக்பேலஸில் நடைபெற்ற எனது இரண்டு நூல்களின் விமர்சனக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

பவித்ரன் மற்றும் சுந்தரபுத்தன் இருவரும் நிலவழி பற்றி விரிவாகப் பேசியது சந்தோஷம் அளித்தது. அரங்கு நிறைய இளைஞர்கள். பலரையும் முதன்முறையாகப் பார்க்கிறேன். இத்தனை பேர் இலக்கியத்தைத் தீவிரமாக வாசிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது

சைக்கிள் கமலத்தின் தங்கை சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து எனது கதைகளின் உலகம் பற்றி மிக நுட்பமாக எடுத்துப் பேசினார் அகரமுதல்வன். அது போலவே கார்த்திக் புகழேந்தியும் தொகுப்பில் தனக்கு எந்தக் கதைகள் பிடித்திருக்கின்றன. ஏன் பிடித்திருக்கின்றன எனச் சிறப்பாக எடுத்துக்காட்டிப் பேசினார்

இரண்டு புத்தகங்களுக்கும் நான் ஏற்புரை வழங்கினேன்.

டிஸ்கவரி புக் பேலஸ் சார்பில் இதை ஒருங்கிணைப்பு செய்த வேடியப்பனுக்கும் இந்த நிகழ்வை முழுமையான ஒளிப்பதிவு செய்து பதிவேற்றம் செய்துள்ள ஸ்ருதி டிவிக்கும் அன்பும் நன்றியும்

காணொளி இணைப்புகள்

பவித்ரன் விக்னேஷ் | நிலவழி – எஸ். ராமகிருஷ்ணன்

https://youtu.be/aqtEnjB_9TQ

Sundharabuddhan speech | சுந்தரபுத்தன் | நிலவழி – எஸ். ராமகிருஷ்ணன்

https://youtu.be/tPVAyYAi9gs

Akaramuthalvan speech | அகரமுதல்வன் | சைக்கிள் கமலத்தின் தங்கை

https://youtu.be/aeFW8PN3t1o

கார்த்திக் புகழேந்தி | சைக்கிள் கமலத்தின் தங்கை

https://youtu.be/M8RgGmCNMw4

S. Ramakrishnan speech | நிலவழி | எஸ். ராமகிருஷ்ணன் உரை

https://youtu.be/KbyhA43Vlzo

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஏற்புரை
S. Ramakrishnan speech
https://www.youtube.com/watch?v=-qdKXy4LLTs

9.07.2017

Archives
Calendar
May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: