போர்ஹெஸ்

போர்ஹெஸ் சிறுகதைகள், கட்டுரைகள் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பினை யாவரும் பதிப்பகம் சிறப்பாக பதிப்பித்துள்ளது.
போர்ஹெஸை தமிழுக்கு அறிமுகம் செய்து அவரது கதைகள் கவிதைகளை  தொடர்ந்து மொழியாக்கம் செய்தவர் கவிஞர் பிரம்மராஜன். அவரது மீட்சி சிறுபத்திரிக்கை உலகில் மிகவும் தனித்துவமான இதழாகும். உலக இலக்கியங்களை தமிழுக்கு அறிமுகம் செய்தததில் மீட்சி பெரும்பங்கு வகித்திருக்கிறது.
ஆங்கிலப் பேராசிரியரான பிரம்மராஜன் சிறந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர், குற்றாலம் கவிதை பட்டறையை கலாப்ரியாவோடு இணைந்து நடத்தியவர்.
பிரம்மராஜன் தொகுத்த போர்ஹெஸ் சிறுகதைகள் முன்னதாக ஸ்நேகா பதிப்பகத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. தற்போது திருத்தப்பட்ட விரிவான போர்ஹெஸ் தொகுப்பை பிரம்மராஜன் கொண்டு வந்திருக்கிறார்., மிகுந்த பாராட்டிற்குரிய முயற்சி.
லத்தீன்அமெரிக்க இலக்கியத்தின் பிதாமகராக கொண்டாடப்படுகிறவர் போர்ஹெஸ். அவரது புனைவின் வீச்சை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த நூல் மிகச்சிறந்த வழிகாட்டியாகும்.  போர்ஹெஸின் முக்கிய கதைகள், கவிதைகள் கட்டுரைகளை சிறப்பாக மொழியாக்கம் செய்து தொகுத்துள்ள பிரம்மராஜனுக்கும் நேர்த்தியாக நூலை வெளிக்கொண்டுவந்துள்ள ஜீவகரிகாலனுக்கும் சிறப்பான அட்டை படத்தை உருவாக்கி நூலை வடிவமைத்த ஜி.முருகனுக்கும்  எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்.
விலை ரூ 550
பக்கங்கள் 320
யாவரும் பதிப்பகம்
தொடர்பு ஜீவகரிகாலன்
9042461472

13.10.2017

Archives
Calendar
March 2018
M T W T F S S
« Feb    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: