தமிழ் ஸ்டுடியோ நிகழ்ச்சி
தமிழ் ஸ்டுடியோ அருண் மிகுந்த அர்ப்பணிப்புடன் மாற்றுசினிமா குறித்த கலந்துரையாடல், பயிலரங்கு. சிறப்பு நிகழ்ச்சிகள், திரையிடல், விருது வழங்குவது எனச்செயல்பட்டு வருகிறார்.
சினிமா புத்தகங்களுக்காகவே ப்யூர் சினிமா என்ற அங்காடி ஒன்றினையும் நடத்தி வருகிறார். அவரது தீவிரமான செயல்பாடும் ஆர்வமும் மிகுந்த பாராட்டிற்குரியது.
தமிழ் ஸ்டுடியோ சார்பில் படிமை இயக்கம் துவங்கப்பட்ட போது அதற்கு சிறப்பு வகுப்புகள் எடுத்திருக்கிறேன். பாலுமகேந்திராவிற்கு விழா எடுத்த போது அதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியிருக்கிறேன்.
தமிழ் சினிமா நூற்றாண்டினைச் சிறப்பிக்கும் வகையில் பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளை அழைத்து கலந்துரையாடல் நிகழ்வுகளை தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.
அக்டோபர் 22 ஞாயிறு மாலை 5 30 மணிக்கு இலக்கியமும் சினிமாவும் குறித்து நான் சிறிய உரை ஒன்றை நிகழ்த்த இருக்கிறேன். அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறும்.
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்
இடம் :
ப்யூர் சினிமா அலுவலக மாடி
7 மேற்கு சிவன் கோவில் தெரு
வடபழனி
நாள் : 22.10.2017 ஞாயிறு
நேரம் : மாலை 5 30